"தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி மட்டும் வளர்ச்சியல்ல"
"தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி மட்டும் வளர்ச்சியல்ல"
UPDATED : செப் 01, 2013 12:00 AM
ADDED : செப் 01, 2013 11:56 AM
நாகமலை, புதுக்கோட்டை: "தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டும் வளர்ச்சி அடைந்தால் போதாது. நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியே முக்கியம்," என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசினார்.
மதுரை காமராஜ் பல்கலையில் 1993-97ம் ஆண்டுகளில் எம்.சி.ஏ., எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த முன்னாள் மாணவர் சந்திப்பு நேற்று நடந்தது.
அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசியதாவது: "நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஐ.டி., துறை பங்களிப்பு 60 மில்லியன் டாலர் ஆக உள்ளது. இதில் 10 சதவீத பங்களிப்பு மதுரை காமராஜ் பல்கலை மாணவர்களுடையது. நான் சென்ற 40 நாடுகளில் ஒவ்வொரு நாட்டிலும் மதுரை காமராஜ் பல்கலை மாணவர்கள் குறைந்தது 2 பேரை சந்தித்துள்ளேன்.
ஐ.டி., துறையில் மட்டும் வளர்ந்தால் போதாது. இத்துறையுடன் சார்ந்து விவசாயம் உள்ளிட்ட இதர துறைகளையும் வளர்த்து நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு மாணவர்கள் உதவ வேண்டும். 11வது ஐந்தாண்டு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.47 ஆயிரம் கோடி நிதியில் பல்கலைகள் பயன்படுத்தியது போக மீதமுள்ள ரூ.30ஆயிரம் கோடி அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது இந்தியாவில் ஆராய்ச்சி துறை வளரவில்லை என்பதை காட்டுகிறது," என்றார்.
