தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இரு சக்கர வாகனங்களை திருடிய பள்ளி மாணவர்கள் கைது

இரு சக்கர வாகனங்களை திருடிய பள்ளி மாணவர்கள் கைது

இரு சக்கர வாகனங்களை திருடிய பள்ளி மாணவர்கள் கைது


UPDATED : செப் 02, 2013 12:00 AM

ADDED : செப் 02, 2013 07:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2013 12:00 AM ADDED : செப் 02, 2013 07:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில், ஜாலிக்காக இரு சக்கர வாகனங்ளை திருடி, பெட்ரோல் காலியாகும் வரை பயன்படுத்திய பள்ளி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். ஐந்து டூவீலர்கள் மீட்கப்பட்டன.

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் இமாம்உசேன். இவரது 15 வயது மகன், தனியார் மெட்ரிக் பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறார். மதுரை லேக்வியூ ரோட்டைச் சேர்ந்தவர் சங்கரராஜ். இவரது 16 வயது மகன், தபால்தந்திநகர் பகுதி பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படிக்கிறார். இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சேர்ந்து ஜாலியாக ஊர் சுற்றினர். நாளடைவில் அவர்களது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால், பெற்றோரின் கண்டிப்புக்கு ஆளாயினர்.

அவர்களிடமிருந்த மொபைல் போன்கள், டூவீலர்களை பெற்றோர் பறித்தனர். வீட்டில் இருந்து நீண்டதூரம் உள்ள பள்ளியில் சேர்த்தனர். இருப்பினும், நட்பு நீடித்தது.

மொபைல்போன்கள், டூவீலர்கள் இல்லாத நிலையில், திருட்டு சாவியை தயாரித்து, அதிவேகமாக செல்லக்கூடிய டூவீலர்களை திருட ஆரம்பித்தனர். பெட்ரோல் இருக்கும் வரை ஜாலியாக ஊர் சுற்றிவிட்டு, காலியானவுடன் அந்த இடத்திலேயே விட்டு விட்டு செல்வதை வழக்கமாக கொண்டனர். போலீசார் கண்டுபிடிக்கக்கூடாது என்பதற்காக, டூவீலர் பதிவு எண்ணையும் மாற்றினர்.

இப்படி ஒரு மாதத்தில் மட்டும் இமாம்உசேன் மகன் 2 டூவீலர்களும், சங்கரராஜ் மகன் 3 டூவீலர்களையும் திருடினர். சந்தேகத்தின்பேரில், இவர்களை அண்ணாநகர் போலீசார் பிடித்து விசாரித்த போது, மேற்கூறிய விபரம் தெரியவந்தது. அவர்களிடமிருந்து திருட்டு டூவீலர்கள் மீட்கப்பட்டன. இருவரும் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

போலீசார் கூறியதாவது:சமீபகாலமாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் டூவீலர், மொபைல் போன் என ஆடம்பரமாக வாழ, குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். சில மாதங்களுக்கு முன், தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், நகைபறிப்பில் ஈடுபட்டு கைதாயினர். பெற்றோர் கண்டிப்பு, தவறான பாதைக்கு வழிகாட்டும் நண்பர்கள் போன்ற காரணங்களால், இளம் வயதிலேயே அவர்களின் படிப்பு கெடுவதோடு, வாழ்க்கையும் திசைமாறுகிறது. பள்ளியிலேயே மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தால் தடுக்க முடியும், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us