தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புத்தகத் திருவிழாவில் மாணவர்களின் ஓவியத் திருவிழா

புத்தகத் திருவிழாவில் மாணவர்களின் ஓவியத் திருவிழா

புத்தகத் திருவிழாவில் மாணவர்களின் ஓவியத் திருவிழா


UPDATED : செப் 02, 2013 12:00 AM

ADDED : செப் 02, 2013 08:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2013 12:00 AM ADDED : செப் 02, 2013 08:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்து வரும் புத்தகத் திருவிழாவில், நேற்று நடந்த ஓவியப்போட்டியில் பள்ளி மாணவர்கள், தங்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தினர்.

தென்மாவட்ட மக்களின் அறிவுப்பசிக்கு தீனிபோடும் வகையில், நடந்து வரும் புத்தகத் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தவும், அவர்களின் படைப்புத்திறனை ஊக்குவிக்கும் வகையிலும், நேற்று 3 பிரிவுகளில் ஓவியப்போட்டிகள் நடந்தன.

குழந்தைகள் பிரிவில் விரும்பிய படங்களை வரைய வேண்டும் என்றும், மற்ற இரு பிரிவுகளுக்கு போட்டிக்களத்தில் தலைப்புகள் கொடுக்கப்பட்டும், ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் "நான் கண்ட கனவு” மற்றும் "புத்தகத் திருவிழா” என்னும் தலைப்புகளில், மாணவர்கள் அசத்தலான ஓவியங்களை வரைந்து, அசத்தினர்.

பரிசு வென்ற மதுரை ஓவியர்கள்: முதல்பிரிவு:முதலிடம்: எஸ்.பிரகதீஸ்வரன் - எஸ்.பி.ஜே.,பள்ளி, இரண்டாமிடம்: எஸ்.திவ்யஸ்ரீ - மகாத்மா பள்ளி, மூன்றாமிடம்: விஷ்ணு சிம்ஹன் - வி.எம்.ஜே., பள்ளி.

இரண்டாம் பிரிவு:முதலிடம்: எஸ்.எஸ்.அஷ்வந்தினி - மகாத்மா பள்ளி, இரண்டாமிடம்: கே.ஸ்ரீநிதி - லட்சுமி பள்ளி, மூன்றாமிடம்: எஸ்.சிவராஜன் - அத்தியபனா பள்ளி.

மூன்றாம் பிரிவு:முதலிடம்: டி.ரோகிந்த் - மகாத்மா பள்ளி, இரண்டாமிடம்: எஸ்.திலக் ராகவேந்திரன் - எஸ்.டி.ஏ., பள்ளி, மூன்றாமிடம்: எஸ்.கே.கோகுல் ஸ்ரீ - சவுராஷ்டிரா பள்ளி.

வெற்றி பெற்றவர்களுக்கு, செப்., 9 ல் நடக்கும் புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும். மாணவர்களிடம் வரவேற்பு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) தலைவர் சண்முகம் கூறியதாவது:

மதுரையில், ஒவ்வொரு ஆண்டும் நடந்து வரும் புத்தகத் திருவிழாவில், மாணவர்களுக்கான ஓவியப்போட்டிகள் நடந்து வருகிறது. ஆனால், இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பங்கேற்றனர். பல மாவட்டங்களில் இருந்தும் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், விரும்பும் புத்தகங்களையும் பரிசாக பெற்றுக் கொள்ள முடியும், என்பதால் எல்லோரிடமும் இது வரவேற்பை பெற்றுள்ளது. செப்., 5 ல் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடக்கிறது, என்றார். இத்திருவிழாவிற்கான ஊடக உதவியை " தினமலர்" நாளிதழ் வழங்குகிறது.

தினமலர் ஸ்டாலில் எழுத்தாளர் கையெழுத்து:மதுரை தமுக்கம் புத்தகத் திருவிழாவில், வாசகர்கள் வாங்கி வரும் புத்தகங்களில், நட்சத்திர எழுத்தாளர்கள் தினமும் கையெழுத்திட்டு தர உள்ளனர். தினமும் மாலை 6.15 மணி முதல் 7 மணி வரை, தினமலர் ஸ்டாலில், இந்த நிகழ்ச்சி நடக்கிறது.இன்று கையெழுத்திடுபவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us