தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு மகளிர் கல்லூரியில் உணவக வசதியின்றி மாணவிகள் பரிதவிப்பு

அரசு மகளிர் கல்லூரியில் உணவக வசதியின்றி மாணவிகள் பரிதவிப்பு

அரசு மகளிர் கல்லூரியில் உணவக வசதியின்றி மாணவிகள் பரிதவிப்பு


UPDATED : செப் 05, 2013 12:00 AM

ADDED : செப் 05, 2013 10:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2013 12:00 AM ADDED : செப் 05, 2013 10:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் அருகே செயல்படும் அரசு மகளிர் கல்லூரியில் "கேன்டீன்" வசதியின்றி ஆசிரியைகள், மாணவிகள் பரிதவிக்கின்றனர்.

கடந்த 1998ல் இக்கல்லூரி துவங்கப்பட்டது. தற்போது இங்கு இரு ஷிப்டிலும் 1500 மாணவிகள் படிக்கின்றனர். 100க்கும் மேற்பட்ட ஆசிரியைகள், ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இக்கல்லூரிக்கென போதிய பஸ் வசதி இன்றி, சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ. தூரமும், கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து 2 கி.மீ., தூரமும் நடக்க வேண்டிய நிலை உள்ளது.

இவை தவிர்த்து, கல்லூரி வளாகத்தில் இதுவரை சிற்றுண்டியோ, கேன்டீன் வசதியோ ஏற்படுத்தவில்லை. ஆசிரியைகள், மாணவிகள் காபி, டீ சாப்பிட வேண்டும் எனில், தலா ஒரு கி.மீ., தூரத்திலுள்ள எஸ்.பி., அலுவலகம், காஞ்சிரங்காலுக்கு செல்ல வேண்டும். காஞ்சிரங்காலுக்கு செல்லும்போது, திருப்புத்தூர் மெயின்ரோட்டை கடக்க இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில், எவ்வித டெண்டரும் இன்றி சிற்றுண்டி வசதியை ஏற்படுத்தலாம் என்ற போதிலும், இதற்கு முன்வர தயங்குகின்றனர். விரைவில் இவ்வளாகத்திற்கு கேன்டீன் வசதியை ஏற்படுத்தவேண்டும் என, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us