தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை: புத்தகத் திருவிழாவில் பேச்சுப் போட்டிகள்

மதுரை: புத்தகத் திருவிழாவில் பேச்சுப் போட்டிகள்

மதுரை: புத்தகத் திருவிழாவில் பேச்சுப் போட்டிகள்


UPDATED : செப் 06, 2013 12:00 AM

ADDED : செப் 06, 2013 07:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2013 12:00 AM ADDED : செப் 06, 2013 07:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், மதுரை தமுக்கம் மைதான புத்தகத் திருவிழாவில், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடந்தன.

பள்ளி மாணவர்களுக்கான போட்டியில், காரைக்குடி மகரிஷி வித்யாலயா மாணவி தி.அகிலா முதலிடம் பெற்றார். மதுரை செயின்ட் மேரி பள்ளி மாணவர் ச. வெங்கடேஸ்வரன் 2ம் இடம், மதுரை செயின்ட் ஜோசப் பள்ளி மாணவி ஜெ.புவனேஸ்வரி 3ம் இடம் பெற்றனர். மதுரை தியாகராஜர் மாதிரி பள்ளி மாணவர் அ.அருணேஷ், விருதுநகர் இந்து நாடார் பள்ளி மாணவி எஸ். அகிலாண்டேஸ்வரி ஆறுதல் பரிசு பெற்றனர்.

கல்லூரி மாணவர்களுக்கான போட்டியில், சிவகாசி அஞ்சா கல்லூரி மாணவி ஜி.ஜெயந்தி முதலிடம் பெற்றார். பி.முனீஷ் பவித்ரா (நத்தம் என்.பி.ஆர்., கல்லூரி) 2ம் இடம், கே.ஆனந்தி (லதா மாதவன் கல்லூரி) 3ம் இடம் பெற்றனர். எஸ்.ஜெயவள்ளி (தியாகராஜர் கல்லூரி), பி.பாண்டியரசி (செந்தமிழ் கல்லூரி) ஆறுதல் பரிசு பெற்றனர். தலைவர் சண்முகம், ஒருங்கிணைப்பாளர் செந்தூரன் ஏற்பாடுகளைச் செய்தனர்.

மதுரை தமுக்கம் புத்தகத் திருவிழாவில், வாசகர்கள் வாங்கி வரும் புத்தகங்களில், நட்சத்திர எழுத்தாளர்கள் தினமும் கையெழுத்திட்டு தர உள்ளனர். தினமும் மாலை 6.15 மணி முதல் 7 மணி வரை, தினமலர் ஸ்டாலில், இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இன்று கையெழுத்திடுபவர்: கவிஞர் சக்திஜோதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us