தொலைநிலைக் கல்வியின் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் குளறுபடி
தொலைநிலைக் கல்வியின் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் குளறுபடி
UPDATED : செப் 06, 2013 12:00 AM
ADDED : செப் 06, 2013 10:21 AM
சென்னை: கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற சென்னைப் பல்கலை தொலைநிலைக் கல்வியின் முதுநிலை படிப்புகளின் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலை வழங்கும் தொலைநிலைக் கல்வியின் எம்.ஏ., எம்.எஸ்சி., உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகளுக்கான தேர்வுகள் கடந்த ஜுன் மாதம் நடத்தப்பட்டன. அவற்றுக்கான தேர்வு முடிவுகள் செப்டம்பர் 6ம் தேதி காலையில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், அறிவித்தபடி தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து, சென்னைப் பல்கலையின் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் தேர்வுத் துறையை தொடர்புகொண்டு கேட்டபோது, "தேர்வு முடிவுகள் செப்டம்பர் 6ம் தேதி வெளியிடப்படாது என்றும், செப்டம்பர் 7ம் தேதிதான் வெளியிடப்படும்" என்றும் தெரிவித்தனர்.
இந்த திடீர் குளறுபடியால், தொலைநிலைக் கல்வி முதுநிலை தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள், குழப்பமும், ஏமாற்றமும் அடைந்தனர்.
