தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துப்புரவு பணியாளர்கள் நியமன முறைகேடு: ஐகோர்ட் புது உத்தரவு

துப்புரவு பணியாளர்கள் நியமன முறைகேடு: ஐகோர்ட் புது உத்தரவு

துப்புரவு பணியாளர்கள் நியமன முறைகேடு: ஐகோர்ட் புது உத்தரவு


UPDATED : செப் 07, 2013 12:00 AM

ADDED : செப் 07, 2013 08:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2013 12:00 AM ADDED : செப் 07, 2013 08:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கல்வி மாவட்ட பள்ளிகளில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனம் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் சிபாரிசுப்படி நடந்துள்ளதாக தாக்கலான வழக்கில், ஐ.ஏ.எஸ்., அல்லது ஐ.பி.எஸ்., அதிகாரிகள் விசாரிப்பது பற்றி அரசுத் தரப்பில் தெரிவிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் கணேசன் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனத்திற்கு, தகுதியானவர்களின் பெயர்களை வேலைவாய்ப்பு அலுவலகம் 2012 ஜூன் 6 ல் பரிந்துரைத்தது. வாட்ச்மேன் பணிக்காக, மேலூர் கல்வி மாவட்ட அலுவலகத்தில், 2012 ஜூன் 14 ல் நேர்காணலில் பங்கேற்றேன்.

நான் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. எனக்கு கூடுதல் தகுதி இருந்தும், பணி நியமனம் வழங்கவில்லை. மதுரை, மேலூர், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்களில் மேற்கண்ட பணி நியமனங்கள் குறித்த பட்டியலை, கல்வி மாவட்ட அலுவலர்களிடம் தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரினேன். உசிலம்பட்டி கல்வி மாவட்டத்திற்கு மட்டும் பட்டியல் வழங்கினர்.

அதில் நியாயமற்ற முறையில், அரசியல்வாதிகளின் சிபாரிசுப்படி பணியாளர்களை தேர்வு செய்துள்ளனர். மற்ற இரு கல்வி மாவட்ட அதிகாரிகள் பதில் தரவில்லை. உசிலம்பட்டி கல்வி மாவட்ட அலுவலரிடம், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற விபரத்தை, இத்துடன் இணைத்துள்ளேன்.

அதில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனத்திற்கு, 28 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள், கூட்டுறவுத்துறை அமைச்சர், மதுரை வடக்குத் தொகுதி, மதுரை தெற்கு, உசிலம்பட்டி, திருமங்கலம் எம்.எல்.ஏ.,க்கள், மதுரை மாவட்ட செயலாளர், சிபாரிசுப்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் (16 பேர்) என தனித்தனியே பிரித்து பட்டியலிடப்பட்டுள்ளது.

வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனம் சட்டவிரோதம் என அறிவித்து ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். ஏற்கனவே நீதிபதி எஸ்.நாகமுத்து, உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில், பணி நியமனம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தார்.

அதில், "எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் பரிந்துரைப்படி பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும் என,&' ஒரு குறிப்பு இருந்தது. இதை பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்திலிருந்து, 2012 ஜூலை 26 ல் வந்த போன் தகவல் அடிப்படையில் எழுதியதாக" கல்வி அலுவலக கண்காணிப்பாளர் மாயன் தெரிவித்தார்.

நீதிபதி, "சில ஆவணங்களை மறைத்துள்ளனர். ஆவணங்களில் தில்லுமுல்லு நடந்துள்ளது. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அரசு வக்கீல், கல்வித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும்" என்றார்.

நேற்று, நீதிபதி எஸ்.நாகமுத்து முன் மனு விசாரணைக்கு வந்தது. முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் (தற்போது அரசு தேர்வுத்துறை இயக்குனர்), பணியாளர் தொகுதி முன்னாள் இணை இயக்குனர் கண்ணன் (தற்போது இடைநிலைக்கல்வி ஆராய்ச்சி இயக்குனர்), உசிலம்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ரவிக்குமார் ஆஜராயினர்.

நீதிபதி: அசல் ஆவணங்கள் எங்கே? ஜெராக்ஸ் நகல்கள்தான் உள்ளன? கம்ப்யூட்டரில் அசல் ஆவணங்கள் இருக்குமே? ஆவணங்களை அழித்துவிட்டார்களா? அவற்றை தாக்கல் செய்ய வேண்டும். "படித்துப் பார்க்காமல் எப்படி ஆவணங்களில் கையெழுத்திட்டீர்கள்" என உசிலம்பட்டி கல்வி அலுவலர் ரவிக்குமாரிடம் கேள்வி எழுப்பினார்.

ரவிக்குமார்: "கவரிங் லெட்டர்" இருந்தது. அதில் கையொப்பமிட்டேன்.

நீதிபதி: யார், யாருக்கு எதனடிப்படையில் யார்? சிபாரிசு செய்தனர் என்ற விபரத்தை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது. உசிலம்பட்டி தவிர பிற கல்வி மாவட்ட அலுவலர்கள் தாக்கல் செய்யவில்லை. இவ்வழக்கில் அரசின் நிலை என்ன?

அரசு வக்கீல்: கோர்ட் உத்தரவிட்டால், விசாரணை செய்ய தயாராக உள்ளோம்.

நீதிபதி: கோர்ட் உத்தரவிட்டால்தான் விசாரணை மேற்கொள்வீர்களா? யார் தலைமையில் விசாரிக்க முடிவு செய்துள்ளீர்கள்?

அரசு வக்கீல்: துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளலாம்.

நீதிபதி: பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்திலிருந்து வந்த போன் தகவல் மூலம், எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் பரிந்துரைப்படி பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும் என மாயன் குறிப்பு எழுதியுள்ளார். துறை ரீதியான விசாரணை சரியாக இருக்காது. அரசின் நிலை என்ன?

அரசு வக்கீல்: பள்ளிக் கல்வித்துறை செயலாளரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

நீதிபதி: ஏற்கனவே 2 நாட்கள் நாட்கள், கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அது போதவில்லையா? விரைவில் பதில் தெரிவிக்க வேண்டும்.

அரசு வக்கீல்: ஐ.ஏ.எஸ்., அதிகாரி மூலம் விசாரிக்கலாம்.

நீதிபதி: பணிக்கு ஆட்களை தேர்வு செய்ததில், தவறு நடந்துள்ளதற்கான முகாந்திரம் உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.பி.எஸ்.,அதிகாரி விசாரித்தால்தான், தொழில்நுட்ப ரீதியாக என்ன தவறு நடந்துள்ளது என்பதை வெளிக்கொணர முடியும். இது பற்றி அரசுத் தரப்பு தெரிவிக்க வேண்டும். இதில் கோர்ட்டிற்கு திருப்தி ஏற்படாத பட்சத்தில், தானாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிடும்.

தற்போது பணியில் உள்ள அதிகாரிகளுக்கும், சம்பவத்திற்கும் தொடர்பில்லை என அரசு வக்கீல் கூறுகிறார். அதை ஏற்று அவர்கள் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. விசாரணை செப்.,11 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us