தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மனதை வசப்படுத்தி மாயம் செய்வது புத்தகங்கள் தான்

மனதை வசப்படுத்தி மாயம் செய்வது புத்தகங்கள் தான்

மனதை வசப்படுத்தி மாயம் செய்வது புத்தகங்கள் தான்


UPDATED : செப் 07, 2013 12:00 AM

ADDED : செப் 07, 2013 09:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2013 12:00 AM ADDED : செப் 07, 2013 09:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கும் புத்தகத் திருவிழா முடிய, இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. மனதின் கோபத்தை மறக்கச் செய்யும் மாமருந்து புத்தகங்கள் தான். "அறிவை விரிவு செய், அகண்டமாக்கு... விசால பார்வையால் விழுங்கு பூமியை" என்றார் பாரதிதாசன்.

புத்தகங்களைப் படிப்பதன் மூலம் உலக விஷயங்களை, நம் பார்வை வட்டத்துக்குள் கொண்டு வரலாம். தேட திகட்டாத லட்சக்கணக்கான புத்தகங்கள், புத்தகத் திருவிழா ஸ்டால்களில் அமைதியாக காத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றைத் தேடி அலையும் மக்கள் கூட்டமும் ஆரவாரமின்றி பார்வையால் அலசிச் செல்கின்றன.

விருப்பத்திற்குரிய புத்தகங்களை விலை பேசாமல் வாங்கிச் செல்கின்றனர். புத்தகங்களை பார்ப்பதே பெருமையாய், படிப்பதே பாக்கியமாய் நினைப்பவர்களின் எண்ண ஓட்டம் இதோ...

அன்பரசி, குடும்பத்தலைவி, மதுரை: ஓலைச்சுவடி புத்தகங்களை வாங்க வந்தேன். அதில் நமது கலாச்சார பெருமைகள், நடைமுறை வாழ்க்கையோடு இணைந்த அறிவியல் உண்மைகள் தொகுக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் விபூதி, குங்குமம் ஏன் வைக்க வேண்டும். கழிப்பறைக்கு சென்ற பின், வாயைக் கழுவ வேண்டும் என்பது போன்ற குறிப்புகள் அதில் இடம் பெற்றிருக்கும். நல்ல புத்தகங்களுக்கு எவ்வளவு விலை கொடுத்தாலும் தகும்.

மணிமேகலை, குடும்பத்தலைவி, மதுரை: என்னுடைய இரண்டரை வயது குழந்தைக்கு, தினமும் நிறைய கதைகள் சொல்ல வேண்டும். அதற்காகவே முல்லா, ஜென், ஈசாப் கதை புத்தகங்களை வாங்குகிறேன். குட்டி குட்டி நீதிக் கதைகளைச் சொல்வதன் மூலம் வாழ்க்கையில் நல்ல விஷயங்களை கற்றுத்தர முடிகிறது. எனக்குப் பிடித்தது வாலியின் கவிதை, சிறுகதை, பா. விஜய் எழுதிய கவிதை புத்தகங்கள் தான். அறிவைப் பெறுவதற்கு, சிறிய அளவில் புத்தகத்தில் முதலீடு செய்வதில் தவறில்லை.

துரைராஜ், ராஜபாளையம்: எனது தேடல் வரலாற்று புத்தகங்கள் தான். தற்போதைய இளம் ஆராய்ச்சியாளர்கள், பி.எச்டி., முடித்தவர்கள் தான் நிறைய புத்தகங்களை வெளியிடுகின்றனர். ராஜபாளையத்தில் சேத்தூர் ஜமீன் சமஸ்தானமாக இருந்ததாக சொல்கின்றனர். அதைப் பற்றிய இன்னும் விவரங்கள் இங்கு கிடைக்கிறதா என்பதை தேடி வருகிறேன். இங்கு வரலாற்று தொடர்பான புத்தகங்கள் அதிகம் உள்ளன.

சந்தோஷ், மாணவர், ஜியோன் மெட்ரிக் பள்ளி, மதுரை: மராட்டிய வீரர் சிவாஜியின் புத்தகத்தை படித்திருக்கிறேன். இங்கே ஈசாப் கதைகள் புத்தகத்தை வாங்கினேன். அறிவியல், நட்சத்திரக் கூட்டம், சூரிய குடும்பம் புத்தகங்கள், 3டி புத்தகங்கள் அதிகம் உள்ளன. எல்லாவற்றையும் வாங்க வேண்டுமென ஆசையாக உள்ளது.

செப்.,9 வரை, தினமும் காலை 11 முதல் இரவு 9 மணி வரை புத்தகத் திருவிழா நடக்கிறது. 10 சதவீத தள்ளுபடி உண்டு. அனுமதி இலவசம். தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர் சங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஊடக உதவியை, தினமலர் நாளிதழ் வழங்குகிறது.

தினமலர் ஸ்டாலில் இலவச இணைய சேவை: கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் பல்வேறு வகை மொபைல்போன்களில் தினமலர் இணையதளத்தை (www.dinamalar.com) பார்க்கும் வசதி உள்ளது. மதுரை தமுக்கம் புத்தகத் திருவிழாவில், தினமலர் ஸ்டால் (54 ஏ) உள்ளது.

இங்கு லேப்டாப், ஐ பேடு, ஆப்பிள்மேக், ஆன்ட்ராய்டு டேப், வின்டோஸ் டேப், ஐ போன், வின்டோஸ் மொபைல்,ஆன்ட்ராய்டு மொபைல், பிளாக்பெரி (ஓ. எஸ்.,10) மொபைல் போன்களில் இலவசமாக தினமலர் இணையதளம் பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்து தரப்படுகிறது. தினமலர் இணையதள பதிவிறக்கம் மற்றும் அதை பார்ப்பதற்கு கட்டணம் இல்லை. அரங்கில் க்யூ.ஆர் கோடு (Q.R Code) உள்ளது. ஸ்கேனர் வசதி உள்ள மொபைல் போன்கள் மூலம் தினமலர் இணையதள அப்ளிகேஷனை டவுன்லோடு செய்யலாம்.

தினமலர் ஸ்டாலில் எழுத்தாளர் கையெழுத்து: மதுரை தமுக்கம் புத்தகத் திருவிழாவில், வாசகர்கள் வாங்கி வரும் புத்தகங்களில், நட்சத்திர எழுத்தாளர்கள் தினமும் கையெழுத்திட்டு தர உள்ளனர். தினமும் மாலை 6.15 மணி முதல் 7 மணி வரை, தினமலர் ஸ்டாலில், இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இன்று கையெழுத்திடுபவர்: கவிஞர் திலக பாமா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us