"தினமலர்" செய்தி எதிரொலி: மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை
"தினமலர்" செய்தி எதிரொலி: மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை
UPDATED : செப் 07, 2013 12:00 AM
ADDED : செப் 07, 2013 11:09 AM
திருவாடானை: "தினமலர்" செய்தி எதிரொலியாக மாணவ, மாணவிகளுக்கு தாமதமின்றி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவாடானை தாலுகா அலுவலகத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஜாதி, இருப்பிடம் மற்றும் வருமான சான்றிதழ் கேட்டு விண்ணப்ப மனுக்களை பெற்றோர்கள் தருகின்றனர். இதில் ஏராளமான மனுக்கள் காணாமல் போவதாக, அலுவலர்கள் கூறுவதால், பெற்றோர்கள் அதிருப்தியடைந்தனர்.
சில நாட்களுக்கு முன் காணாமல் போன மனுக்களை, பெற்றோர்களே தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இது குறித்து "தினமலர்" நாளிதழில் செய்தி வெளியானது. இது குறித்து, தாலுகா அலுவலர்களிடம், மாவட்ட நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளது. இதில் மொத்த மனுக்கள், வழங்கபட்ட மனுக்கள், காணமல் போனவை எத்தனை என்ற அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட தனிதுணை கலெக்டர் ரவீந்திரன், தாலுகா அதிகாரிகளிடம் காணாமல் போன மனுக்கள் விபரம் குறித்து விளக்கம் கேட்டார்.
திருவாடானை தாலுகா அலுவலக ஊழியர் சிலர் கூறுகையில், "மாவட்ட நிர்வாகம், மனுக்கள் குறித்து பிரச்னை இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. விண்ணப்பதாரர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல், மனுக்களை பெற்றவுடன், மறுநாள் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றனர்.
