தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஈரோடு சிக்கையா நாயக்கர் கல்லூரியில் 27 ஆசிரியர்கள் நியமனம்

ஈரோடு சிக்கையா நாயக்கர் கல்லூரியில் 27 ஆசிரியர்கள் நியமனம்

ஈரோடு சிக்கையா நாயக்கர் கல்லூரியில் 27 ஆசிரியர்கள் நியமனம்


UPDATED : டிச 02, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


ஈரோடு:
பல ஆண்டுகளாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய சிக்கையா நாயக்கர் கல்லூரியில் 27 ஆசிரியர்கள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு சிக்கையா நாயக்கர் கல்லூரி 1954ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்நகரில் துவக்கப்பட்ட முதல் கல்லூரியும் இதுவே. அரசு உதவிபெறும் இக்கல்லூரியில் நிர்வாக பிரச்சனை தலைதூக்கியது. இதுசம்பந்தமான, வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதன்காரணமாக, கல்லூரி நிர்வாகம் தற்போது கல்வித்துறை வசம் உள்ளது.
இங்கு ஆசிரியர் பற்றாக்குறை அதிகளவில் இருந்தும், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் பல ஆண்டு காலம் கழிந்தது. ஆசிரியர் பற்றாக்குறை எண்ணிக்கை 47 ஆக உயர்ந்தநிலையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இதனால், கல்லூரி மாணவர் தேர்ச்சி விகிதம் அதலபாதாளத்திற்கு சென்றது.
இந்நிலையில், டிச. 2ம் தேதி இக்கல்லூரிக்கு புதியதாக 27 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை பல்கலைக்கழக ஆசிரியர் கழக உறுப்பினர்கள் வரவேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us