தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"கல்வியில் மாற்றம் வேண்டும்"

"கல்வியில் மாற்றம் வேண்டும்"

"கல்வியில் மாற்றம் வேண்டும்"


UPDATED : செப் 08, 2013 12:00 AM

ADDED : செப் 08, 2013 11:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2013 12:00 AM ADDED : செப் 08, 2013 11:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலூர்: "கல்வியில் பெரிய அளவில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்," என வி.ஐ.டி., வேந்தர் பேசினார்.

வேலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 31 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசுகள், விருது வழங்கும் விழா வேலூர் வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் நடந்தது.

விழாவில் வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் விருது வழங்கி பேசியதாவது:

"கடந்த, 2009ம் ஆண்டு ,14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு இலவச கட்டாய கல்விச் சட்டம் நம் நாட்டில் கொண்டு வரப்பட்டது. இதை அமுல்படுத்துவது சுலபமல்ல. இந்த சட்டத்தினால் நான்கு ஆண்டுகளில் எவ்வளவு வெற்றி கிடைத்துள்ளது என்பதை பார்க்க வேண்டும்.

கேரள மாநிலத்தில் 18 வயது வரை கட்டாயக் கல்வி என மாற்றி அமுல்படுத்தி வருகின்றனர். அதே போல தமிழகத்தில் மாற்ற வேண்டும். மத்திய அரசு சட்டங்கள் இயற்றினாலும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் வெற்றி பெற முடியாது.

இந்த திட்டத்துக்கு ஆண்டுக்கு, 2 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மத்திய அரசு அறிவித்தது. இதில், மத்திய அரசு பங்களிப்பு 68 சதவீதம், மாநில அரசுகள் பங்களிப்பு 32 சதவீதம். நாட்டில் தனியார் பள்ளிகளில் இந்த திட்டத்தில் மாணவர்களை சேர்க்க வேண்டும். இதற்கு ஆகும் செலவை அரசு ஏற்க வேண்டும். கேரள மாநிலத்தில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு தலா 5,600 ரூபாய் வழங்கப்படுகின்றது.

நம் நாட்டில் உள்ள பள்ளிகளில் 148 மொழிகளில் பாடம் சொல்லித் தரப்படுகின்றது. பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதி, ஆசிரியர் பற்றாக்குறை, தரமான கல்வி இது போன்றவற்றால் இந்த திட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியவில்லை. அரசுப் பள்ளிகளின் தரம் எப்படி உள்ளது, 73 நாடுகளில் 5 லட்சம் மாணவர்களிடம் உலக நாடுகள் ஒரு ஆய்வு செய்தது. இதில், சீனா முதலிடத்திலும், இந்தியா 72வது இடத்திலும் வருகிறது. இந்த நிலை மாற கல்வியில் பெரிய அளவில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.

கல்விக்காக அரசு ஆறு சதவீதம் செலவழிக்க வேண்டும். ஆனால், நான்கு சதவீதம் தான் செலவழிக்கிறது. ஆனால் தனி நபர் கல்விக்காக 7.5 சதவீதம் செலவழிக்கின்றனர். கல்வி, ஆரோக்கியம், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்." இவ்வாறு பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us