தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"35 சதவீதம் இளைஞர்கள் புகையிலைக்கு அடிமை"

"35 சதவீதம் இளைஞர்கள் புகையிலைக்கு அடிமை"

"35 சதவீதம் இளைஞர்கள் புகையிலைக்கு அடிமை"


UPDATED : செப் 12, 2013 12:00 AM

ADDED : செப் 12, 2013 08:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 12, 2013 12:00 AM ADDED : செப் 12, 2013 08:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: "நாட்டின் இளைஞர்களில், 35 சதவீதம் பேர், புகையிலை பொருட்களை பயன்படுத்தும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். சிகரெட்டை விட, குட்கா, ஜர்தா போன்ற புகையிலை பொருட்களைத் தான், அதிகம் பயன்படுத்துகின்றனர்" என மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார்.

புகையிலை பயன்பாட்டை ஒழிப்பது தொடர்பான, சர்வதேச கருத்தரங்கம், டில்லியில் நேற்று நடைபெற்றது. உலக சுகாதார மையம் ஏற்பாடு செய்திருந்த இந்த கருத்தரங்கில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், குலாம் நபி ஆசாத் பேசியதாவது:

நம் நாட்டில், 27.6 கோடி பேர், புகையிலை பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர். நம் இளைஞர்களில், 35 சதவீதம் பேர், புகையிலை பொருட்களை பயன்படுத்துகின்றனர். சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட, குட்கா, ஜர்தா போன்ற புகையிலை பழக்கம் தான், அதிக அளவில் உள்ளது.

சிகரெட் பிடிக்கும் பழக்கம், 9 சதவீதம் பேரிடம் உள்ளது என்றால், குட்கா, ஜர்தா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவோரின் சதவீதம், 35 வரை உள்ளது. மத்திய அரசு, குட்கா, ஜர்தா போன்றவற்றை, தடை செய்துள்ளது. இவ்வாறு, அமைச்சர் குலாம் நபி ஆசாத் பேசினார்.

மத்திய சுகாதாரத் துறை செயலர், டெய்சி ராஜு பேசும் போது, "புகையிலையை, அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில், நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. புகையிலையை அதிக அளவில், உற்பத்தி செய்யும் நாடுகள் வரிசையிலும், மூன்றாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us