தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை மருத்துவ கல்லூரியில் பேச்சு, கேள்வியியல் பட்ட படிப்பு

சென்னை மருத்துவ கல்லூரியில் பேச்சு, கேள்வியியல் பட்ட படிப்பு

சென்னை மருத்துவ கல்லூரியில் பேச்சு, கேள்வியியல் பட்ட படிப்பு


UPDATED : செப் 14, 2013 12:00 AM

ADDED : செப் 14, 2013 08:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 14, 2013 12:00 AM ADDED : செப் 14, 2013 08:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரியின், பேச்சு, கேள்வியியல் பட்டப்படிப்புக்கு, இந்திய மறுவாழ்வு மருத்துவக் கழகம் அனுமதி அளித்துள்ளது. அரசுக் கல்லூரிகளில், நாட்டில் முதல் முறையாக இந்த பட்டப்படிப்பு துவங்கப்பட்டுள்ளது.

சென்னை மருத்துவக்கல்லூரியில், பேச்சு, கேள்வியியல் நான்காண்டு பட்டப்படிப்பு (பி.ஏ., எஸ்.எல்.பி.,)., 2010 - 11ம் ஆண்டில் துவங்கப்பட்டது. 20 மாணவர்கள், கவுன்சிலிங் மூலம் சேர்க்கப்பட்டனர். இதற்கு இந்திய மருத்துவக் கழகம் ஒப்புதல் அளிக்காமல் இருந்தது. இதனால், மாணவர்கள் தேர்வு எழுத மட்டும், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை அனுமதித்தது; தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.

இந்த நிலையில், இந்திய மறுவாழ்வு மருத்துவக்கழகம், 4 ஆண்டுகளுக்கும் சேர்த்து, இந்த பட்டப்படிப்புக்கு அனுமதி அளித்துள்ளது. 20 ஆக இருந்த இடங்களின் எண்ணிக்கை, 25 ஆக உயர்த்தி அனுமதி தந்துள்ளது.

இதுகுறித்து, டீன் கனகசபை கூறியதாவது: நாட்டில், 8 சதவீதம் பேர் பிறவியில் பேச்சுதிறன், கேட்கும் திறன் இல்லாத நிலை உள்ளதால், இத்தகைய சிகிச்சைக்கு டாக்டர்கள் தேவை. இதைக்கருதியே, நாட்டில் முதல் முறையாக, பேச்சு, கேள்வியில் பட்டப்படிப்பு துவங்கப்பட்டுள்ளது.

கேள்வி குறைபாடு, ஆட்டிசம், பெருமூளை வாதம், ரத்த நாள அடைப்பு, விபத்தால் ஏற்படும் மூளைச்சிதைவு, குடல் பிரச்னைகள், மூளை வளர்ச்சி பாதிப்பு, திக்குவாய், உச்சரிப்பு குறைபாடு உள்ளிட்ட, 15 வகையான பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும். இதற்கான வகுப்புகள் துவங்கி விட்டன. தேவையான உபகரணங்கள், நூல்கள் வாங்க, தமிழக அரசு, ஒரு கோடி ரூபாய் அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, 15 லட்ச ரூபாயில், ஐ-பாடு, தானாகவே இயங்கும் செவிநரம்பு முதல் மூளைத்தண்டு செயல்பாட்டைக் கண்டறியும் கருவி என, இரண்டு கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us