தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சர்ச்சைகளை உருவாக்கும் பெரியார் பல்கலை., தற்காலிக துணைவேந்தர் குழு

சர்ச்சைகளை உருவாக்கும் பெரியார் பல்கலை., தற்காலிக துணைவேந்தர் குழு

சர்ச்சைகளை உருவாக்கும் பெரியார் பல்கலை., தற்காலிக துணைவேந்தர் குழு


UPDATED : செப் 14, 2013 12:00 AM

ADDED : செப் 14, 2013 10:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 14, 2013 12:00 AM ADDED : செப் 14, 2013 10:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், பெரியார் பல்கலை இயற்பியல் துறைத்தலைவரான பேராசிரியர் கிருஷ்ணகுமார் 2010ம் ஆண்டு துணைவேந்தராக பொறுப்பு வகித்தார். அப்போது, வீரபாண்டி ஆறுமுகம் இல்லத்திருமணத்துக்காக, பெரியார் பல்கலை விருந்தினர் மாளிகையை புதுப்பிக்க 40 லட்ச ரூபாய் மதிப்பில், ஏ.சி., உள்ளிட்ட ஃபர்னிச்சர் வாங்கப்பட்டது. இவை அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் கொள்முதல் செய்யாமல், இரு மடங்கு விலை கொடுத்து பெற்றதும் அதில் பல லட்ச ரூபாய் வரை முறைகேடு நடந்ததாகவும் புகார் எழுந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன், இயற்பியல் துறைத்தலைவர் பேராசிரியர் கிருஷ்ணகுமார், "ஸ்டேஷனரி" வாங்கியதற்காக, "ஜோதி பேப்பர் மார்ட்" என, போலி பில் சமர்பித்து, பல லட்ச ரூபாய் வரை மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இந்த போலி பில்களை விஜிலென்ஸ் போலீஸார் கைப்பற்றி, பல்வேறு பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இம்முறைகேடு குறித்து விசாரிக்க, முன்னாள் மாவட்ட நீதிபதி சடையாண்டி தலைமையில் ஒருநபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இவ்விசாரணைக்காக இயற்பியல் துறைத்தலைவர் கிருஷ்ணகுமார், "சஸ்பெண்ட்" செய்யப்பட்டார். இந்நிலையில், துணைவேந்தர் முத்துச்செழியன் பதவிக்காலம் முடிந்து, தன் பொறுப்பை, தொழில்நுட்ப இயக்குனரக கமிஷனர் தலைமையிலான, "தற்காலிக துணைவேந்தர் கமிட்டி"யிடம் ஒப்படைத்தார்.

தற்காலிக துணைவேந்தர் பொறுப்பில், "எவ்வித பாலிஸி" முடிவுகளும் எடுக்க அதிகாரம் இல்லாத நிலையில், நேற்று இக்குழு, பேராசிரியர் கிருஷ்ணகுமார், "சஸ்பெண்ட்"டை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பல்கலை விதிமுறைக்கு மாறான இந்த உத்தரவு பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது: பொதுவாக நீதி விசாரணை என வரும்போது, அவர்களுக்கு உதவும் வகையில், குற்றம் சாட்டப்படுபவர் சஸ்பெண்ட் செய்யப்படுவது வழக்கம். விசாரணையில், அவர் குற்றமற்றவர் என நிரூபணமாகும்போது சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்வது வழக்கம். ஆனால், இங்கு நீதி விசாரணைக்கு, நிர்வாகம் உதவாமல், தன்னிச்சையாக சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்துள்ளது.

இதுபோன்ற முடிவுகளை தற்காலிக துணைவேந்தர் கமிட்டி எடுக்க அதிகாரமில்லாத நிலையிலும், அவசர அவசரமாக உத்தரவை ரத்து செய்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இதே வழியை பின்பற்றி, ஊழல் முறைகேடு செய்து, கையும் களவுமாக பிடிபட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களும், பல்கலையின் உள்ளே மீண்டும் வர முயற்சி செய்வது வெட்கக்கேடாக உள்ளது. இவற்றை தடுத்து நிறுத்த கவர்னரும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us