தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"நியூட்ரினோ" மூலம் அறிவியலில் புரட்சிகர மாற்றங்கள்: பேராசிரியர் தகவல்

"நியூட்ரினோ" மூலம் அறிவியலில் புரட்சிகர மாற்றங்கள்: பேராசிரியர் தகவல்

"நியூட்ரினோ" மூலம் அறிவியலில் புரட்சிகர மாற்றங்கள்: பேராசிரியர் தகவல்


UPDATED : செப் 15, 2013 12:00 AM

ADDED : செப் 15, 2013 09:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2013 12:00 AM ADDED : செப் 15, 2013 09:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: "நியூட்ரினோக்கள் மூலம் இயற்பியல், விண்வெளி அறிவியலில் புரட்சிகர மாற்றங்கள் ஏற்படும்" என பேராசிரியர் ராஜசேகரன் பேசினார்.

மதுரையில் ராஜராஜன் அறிவியல் மையம் சார்பில், நியூட்ரினோ முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கு நடந்தது. இயக்குனர் ஜெயப்பிரகாசம் வரவேற்றார். சென்னை கணித அறிவியல் நிறுவன பேராசிரியர் ராஜசேகரன் பேசியதாவது:

இயற்பியல் விஞ்ஞானம் மூலம், விண்வெளி ஆராய்ச்சியில் நியூட்ரினோ பற்றிய முக்கிய உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டது.  அண்டம் முழுவதும் அதிகளவில் நியூட்ரினோக்கள் பரவியுள்ளன. நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள், ஒவ்வொரு விநாடியும், நம் உடலுக்குள் புகுந்து வெளியேறுகின்றன.

ஒளித்துகள்களை (போட்டோன்கள்) போல் நியூட்ரினோக்கள் எடை அற்றவை என விஞ்ஞானிகள் கருதினர். 1998 ல், நியூட்ரினோக்களுக்கு எடை உண்டு என கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இயற்பியல், விண்வெளி அறிவியலில் புரட்சிகர மாற்றங்கள் ஏற்படும், என எதிர்பார்க்கப்படுகிறது. நியூட்ரினோ பற்றி மேலும் பல அரிய உண்மைகள் கண்டுபிடிக்கப்பட உள்ளன.

உலகெங்கும் ஆராய்ச்சிக்கூடங்கள் கட்டும் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. புதிய உண்மைகளை கண்டுபிடிக்க, நாடுகளிடையே போட்டி நிலவுகிறது. நியூட்ரினோ அறிவியலில் ஏற்கனவே, நம்நாடு முன்னேற்றம் கண்டுள்ளது. காஸ்மிக் கதிர்களிலிருந்து உருவாகும் நியூட்ரினோக்கள், முதன்முதலில் கோலார் தங்கவயல் சுங்கரத்தில்தான் 1965 ல் கண்டுபிடிக்கப்பட்டது.

அச்சுரங்கங்கள் 15 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டன. இழந்த வாய்ப்பை மீண்டும் பெற வேண்டும் என்பது, இந்திய நியூட்ரினோ அறிவியற்கூடம் (ஐ.என்.ஓ.,) திட்டத்தின் குறிக்கோள். இந்திய அறிவியல் நிறுவனங்கள், பல்கலைகள் உட்பட 25 நிறுவனங்கள் இணைந்து பாதாள அறிவியல் கூடத்தை நிறுவ முன்வந்துள்ளன.

இதன்படி, தேனி மாவட்டம் தேவாரம் அருகே அம்பரப்பர் மலையில், 1,600 கோடி ரூபாயில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. அரசு 77 ஏக்கர் புறம்போக்கு நிலம் ஒதுக்கியுள்ளது. இந்திய அணுசக்தித்துறை, விஞ்ஞான தொழில் நுட்பத்துறை நிதி ஒதுக்கியுள்ளன. மலையின் வெளி பகுதியிலிருந்து துவங்கி, மலையின் உள்ளே 2 கி.மீ., தூரம் சுரங்கப்பாதை அமைக்கப்படும்.

ஆய்வக நீளம் 130 கி.மீ., அகலம் 30 கி.மீ., உயரம் 25 கி.மீ., கொண்டதாக இருக்கும். சுரங்கப்பாதை பணி முடிய, 4 ஆண்டுகள் ஆகும். நியூட்ரினோக்களை ஈர்ப்பதற்கு, 50 ஆயிரம் டன் எடையுள்ள மின்காந்த "டிடெக்டர்" அமைக்கப்படும். மதுரை காமராஜ் பல்கலை அருகே வடபழஞ்சியில், 30 ஏக்கரில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும். இங்கு 8000 டன் எடையுள்ள "டிடெக்டர்" பொருத்தப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us