தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செயல்படாத "சையில்டு லைன்" எண்: தகவல் தெரிவிப்பதில் சிக்கல்

செயல்படாத "சையில்டு லைன்" எண்: தகவல் தெரிவிப்பதில் சிக்கல்

செயல்படாத "சையில்டு லைன்" எண்: தகவல் தெரிவிப்பதில் சிக்கல்


UPDATED : செப் 15, 2013 12:00 AM

ADDED : செப் 15, 2013 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2013 12:00 AM ADDED : செப் 15, 2013 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: சிறுமிகள் திருமணம் குறித்து தகவல் தெரிவிக்க, "சையில்டு லைன்" அமைப்பின் கட்டணமில்லாத தொலைபேசி எண் 1098 செயல்பட வில்லை. சமூக நலத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று தகவல் கூறுவதற்குள், திருமணம் முடிந்து விடும் நிலை உள்ளது.

தமிழகத்தில் 18 வயதிற்குட்பட்ட பெண்கள், 21 வயதிற்குட்பட்ட ஆண்கள், திருமணம் செய்வது குழந்தை திருமண தடை சட்டம் 2006 ன் படி குற்றமாகும். இதை மீறி சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர், உறவினர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.

இத்தகைய திருமணம் குறித்து, மாவட்ட சமூக நல அலுவலர், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர், மாவட்ட குடும்ப நல அலுவலர், "சையில்டு லைன்" அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். இதற்காக, கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 வழங்கப்பட்டுள்ளது. இதில் தொடர்பு கொள்ளும் போது, இந்த எண் உபயோகத்தில் இல்லை என கூறப்படுவதால், புகார் தெரிவிக்க முன் வரும் பலரும், பாதிக்கப்படுகின்றனர்.

விருதுநகர் ஜெயக்குமார் கூறுகையில், "சிறுமிகள் திருமணம் குறித்து தகவல் தெரிவிக்க, கட்டணம் இல்லா தொலைபேசி 1098 ல் தொடர்பு கொண்டால், உபயோகத்தில் இல்லை என வருகிறது. சிலர், இந்த தகவலை ரகசியமாக கொடுக்க விரும்புவர். இந்த எண் செயல்படாததால், சமூக நலத்துறை அலுவலகத்துக்கு நேரடியாக சென்று புகார் கொடுக்க வேண்டியதுள்ளது. இதனால், வீண் செலவு, அலைச்சல் ஏற்படுகிறது.அதற்குள் திருமணமும் முடிந்து விடுகிறது," என்றார்.

"சையில்டு லைன்" திட்ட ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறுகையில், "பி.எஸ்.என்.எல்., டொக்கமோ போன்ற நிறுவனங்கள் மட்டுமே, கட்டணமில்லா இணைப்புக்கு அனுமதி அளித்துள்ளன. ஒரு சில மண்டலங்களில் இது போன்ற பிரச்சனைகள் உள்ளன. இதை தவிர்க்க பிற தனியார் மொபைல் நிறுவனத்துடன், இலவச இணைப்புக்கு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது," என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us