தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசுக் கல்லூரி சாலை பழுது; மாணவ, மாணவிகள் அவதி

அரசுக் கல்லூரி சாலை பழுது; மாணவ, மாணவிகள் அவதி

அரசுக் கல்லூரி சாலை பழுது; மாணவ, மாணவிகள் அவதி


UPDATED : செப் 16, 2013 12:00 AM

ADDED : செப் 16, 2013 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 16, 2013 12:00 AM ADDED : செப் 16, 2013 10:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: கொளஞ்சியப்பர் கல்லூரி சாலை பழுதடைந்துள்ளதால் அவ்வழியாக செல்லும் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் சிரமம் அடைகின்றனர்.

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் ஸ்ரீமுஷ்ணம், நெய்வேலி, மங்கலம்பேட்டை, கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி உட்பட பல பகுதிகளைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையிலிருந்து கல்லூரி வரையிலான 200 மீட்டர் சாலை சேதமடைந்து, கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், மழைக்காலத்தில் சாலையில் மழை நீர் தேங்கி குளம் போல் நிற்கிறது. இதனால் கல்லூரிக்குச் செல்லும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கடும் சிரமம் அடைகின்றனர்.

மேலும், கல்லூரி முகப்பிலுள்ள ஆர்ச் பழுதாகி உடைந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே, கல்லூரி சாலை மற்றும் முகப்பு வளைவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us