தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இசைப்பள்ளியை தரம் உயர்த்த இசை ஆர்வலர்கள் கோரிக்கை

இசைப்பள்ளியை தரம் உயர்த்த இசை ஆர்வலர்கள் கோரிக்கை

இசைப்பள்ளியை தரம் உயர்த்த இசை ஆர்வலர்கள் கோரிக்கை


UPDATED : செப் 16, 2013 12:00 AM

ADDED : செப் 16, 2013 11:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 16, 2013 12:00 AM ADDED : செப் 16, 2013 11:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: "கிருஷ்ணகிரி அரசு இசைப்பள்ளியை, இசைக்கல்லூரியாக தமிழக அரசு தரம் உயர்த்த வேண்டும்" என இசை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி அரசு இசைப்பள்ளியில் குரலிசை, பரதநாட்டியம், மிருதங்கம், தவில், ஓதுவார் போன்ற இசை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இப்பள்ளியில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இசை பயிற்சி பெற்று செல்கின்றனர். இசைப் பயிற்சி மூன்று ஆண்டுகள் வழங்கப்படுகிறது.

முறையாக தேர்வு செய்யப்படுவோருக்கு தமிழக அரசு இசைப் பயிற்சி சான்றிதழ் வழங்கி வருகிறது. இந்த சான்றிதழை வைத்து இசை பயின்றவர்கள் அரசு கோவில்களில் இசை பணியாற்ற வாய்ப்பு பெற முடியும்.

ஆனால், இசைப் பள்ளியில் படித்து முடித்து விட்டு மேற்கொண்டு இசைக்கல்லூரியில் மூன்றாண்டு பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு கோவில்களில் இசை பணியாற்றி முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

கல்லூரியில் இசை பயின்றவர்கள் இல்லாத பட்சத்தில் இசைப்பள்ளியில் பயின்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரியில் உள்ள அரசு இசைப்பள்ளியில் இசை பயின்றவர்கள் மேற்கொண்டு இசைக் கல்லூரிகளில் சேர வேண்டுமென்றால், மதுரை, தஞ்சை, கோவை மற்றும் சென்னைக்கு செல்ல வேண்டியுள்ளது.

தூரத்தை கணக்கில் கொண்டு பல மாணவர்கள் இசைப்பள்ளியோடு பயிற்சியை நிறுத்திகொள்கின்றனர். எனவே, கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் அரசு இசைப்பள்ளியை இசைக்கல்லூரியாக தமிழக அரசு தரம் உயர்த்த வேண்டும் என்று இசை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவேரிப்பட்டணம் ஸ்ரீ தியாகராஜசாமி ஆராதனை கமிட்டியின் தலைவர் ரத்தினம் கூறியது: தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கூடுதலாக அரசு இசைக்கல்லூரிகள் உள்ளன. இதனால் தென் மாவட்டங்களில் உள்ள இசைக்கலைஞர்களுக்கு நிகராக வட மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இசையில் வளர முடிவதில்லை.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் இசைப் பயிற்சி பெற்றவர்கள் அரசு கோவில்களில் இசை பணியாற்ற சேர வேண்டும் என்றால் இசைக்கல்லூரியில் படித்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இங்குள்ள ஏழை இசை கலைஞர்களால் வெளி மாவட்டங்களுக்கு சென்று கல்லூரியில் சேர்ந்து இசை பயிற்சி பெற முடியாத நிலை உள்ளது. எனவே, கிருஷ்ணகிரியில் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் இசைப்பள்ளியை, இசைக் கல்லூரியாக தரம் உயர்த்தி அதற்கென தனியாக நிலம் ஒதுக்கி கட்டிடங்கள் கட்ட வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us