தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை எட்டு எட்டாக பிரிக்க வேண்டும்: ஐகோர்ட் நீதிபதி பேச்சு

மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை எட்டு எட்டாக பிரிக்க வேண்டும்: ஐகோர்ட் நீதிபதி பேச்சு

மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை எட்டு எட்டாக பிரிக்க வேண்டும்: ஐகோர்ட் நீதிபதி பேச்சு


UPDATED : செப் 17, 2013 12:00 AM

ADDED : செப் 17, 2013 08:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 17, 2013 12:00 AM ADDED : செப் 17, 2013 08:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்தமபாளையம்: மாணவர்கள், தங்கள் வாழ்க்கையை எட்டு எட்டாக பிரித்துக்கொள்ள வேண்டும், என சென்னை ஐகோர்ட் நீதிபதி சி.டி. செல்வம் பேசினார்.

ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம்., பள்ளிகளின் பொன்விழா ஆண்டு துவக்கவிழா சென்னை ஐகோர்ட் நீதிபதி சி.டி. செல்வம் தலைமையில் நடந்தது. தாளாளர் எம்.எஸ்.பிரபாகர் வரவேற்றார். சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலை வேந்தர் பாரிவேந்தர் முன்னிலை வகித்து, புதிய விடுதி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

பொன்விழா தோரண வாயிலை, பாடலாசிரியர் வைரமுத்து திறந்து வைத்தார். தோரண வாயிலை பங்குத் தந்தை ஜோசப் அந்தோணி அர்ச்சித்தார். பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் நீதிபதி சி.டி. செல்வம் பேசியதாவது:

மாணவர்கள் தங்களின் வாழ்வை, சினிமாவில் வரும் பாடல் போன்று, எட்டு எட்டு பருவங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும். இதில் மூன்றாவது எட்டு தைரியமும், ஆபத்தும் நிறைந்தது. சிறிய தடுமாற்றமும் இருக்கும். அப்பருவத்தில் மட்டும் பிறரின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கற்க வேண்டும்.

அதில் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு, தாங்கள் எடுத்த காரியத்தில் சிரத்தையுடன், நல்ல விஷயங்களை முயன்று செய்தால், வாழ்வில் எந்த உயர்ந்த இடத்திற்கும் செல்லலாம்" என்றார். பள்ளியின் வரலாறு குறித்து, உதவி தலைமையாசிரியர் செல்வம் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us