தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவியல் கற்பிக்கும் முறையை மாற்ற வேண்டும்: பிரதமர்

அறிவியல் கற்பிக்கும் முறையை மாற்ற வேண்டும்: பிரதமர்

அறிவியல் கற்பிக்கும் முறையை மாற்ற வேண்டும்: பிரதமர்


UPDATED : டிச 04, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 04, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பின், ஜவகர்லால் நேரு மையத்தில் அறிவியல் கூடம் ஒன்றை திறந்து வைத்து பிரதமர் மன்மோகன் பேசியதாவது:
அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் அறக்கட்டளை போல, இந்தியாவிலும், தேசிய அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி ஆணையம் அமைக்கப்படும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அடிப்படை  ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக அமைக்கப்படும் இந்த ஆணையம், ஒரு தன்னாட்சி அமைப்பாக செயல்படும். இம்மையம் ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்களுக்கு தடையற்ற பொருளாதார உதவிகளை அளிக்கும்.
இந்தியாவில் புதிதாக  20 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், 10 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களும் அமைக்கப்படும். இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு சென்ற திறமைமிக்க பொறியாளர்கள் எல்லாம், சமீபகாலமாக நம்நாட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் வளர்ச்சியில் பங்கேற்க விரும்புகின்றனர்.
அறிவியல் விஷயத்திலும் இதுபோன்ற சாதகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். வெளிநாட்டிலிருக்கும் நம் விஞ்ஞானிகள் எல்லாம் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும். நம்மிடம் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப மையங்கள் உள்ளன. ஆனாலும், அடிப்படை அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் சிறப்பான நிலையை எட்ட முடியாததற்கான காரணம் தெரியவில்லை.
மிகவும் குறைவான மாணவர்களே, அறிவியல் சார்ந்த பணிகளை மேற்கொள்ள விரும்புகின்றனர். எனவே, இளைஞர்களை ஈர்க்கும் வகையில், அறிவியலை கற்பிக்கும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us