தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கடலில் தத்தளித்த மாணவர்களை காப்பாற்றிய சக மாணவனுக்கு பாராட்டு

கடலில் தத்தளித்த மாணவர்களை காப்பாற்றிய சக மாணவனுக்கு பாராட்டு

கடலில் தத்தளித்த மாணவர்களை காப்பாற்றிய சக மாணவனுக்கு பாராட்டு


UPDATED : செப் 19, 2013 12:00 AM

ADDED : செப் 19, 2013 09:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2013 12:00 AM ADDED : செப் 19, 2013 09:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை: கடலில் தத்தளித்த பள்ளி மாணவர்களைக் காப்பாற்றிய சக மாணவனை, ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டியதுடன், மாணவனுக்கு அரசின் வீரதீர செயலுக்கான விருது வழங்க வேண்டும் எனவும், கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டம், திருமுல்லைவாசலைச் சேர்ந்தவர், நிஜாம் அகமது மகன், அமிருதீன், 14. இவர், திருமுல்லைவாசல், அரசு மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். இம்மாதம், 15ம் தேதி, அமிருதீன், சகாப்தீன் மற்றும் 10ம் வகுப்பு மாணவன் சமீர்பாரீஸ் ஆகிய மூவரும், கடலில் குளிக்கச் சென்றனர்.

அப்போது, அமிருதீன் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டான். அவனைக் காப்பாற்றச் சென்ற இருவரும் அலையில் சிக்கி, உயிருக்குப் போராடினர். அருகில் குளித்த, அதே பள்ளி மாணவன் ரிஷி, தன் உயிரைப் பணயம் வைத்து, கட்டு மரத்தில் சென்று, கடலில் தத்தளித்த மூன்று மாணவர்களையும் மீட்டு, கரைக்கு கொண்டு வந்தான்.

தகவலறிந்த மீனவர்கள், ஆபத்தான நிலையில் இருந்த அமிருதீனை, சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், உயிரிழந்தான். மாணவர்களை காப்பாற்றிய ரிஷியை, அவரது பள்ளி ஆசிரியர்களும், பொதுமக்களும் பாராட்டினர். மேலும், ரிஷிக்கு அரசின் வீரதீர செயலுக்கான விருது வழங்க வேண்டும் எனவும், கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us