தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நெல்லை பல்கலையில் 23ம் தேதி பட்டமளிப்பு விழா

நெல்லை பல்கலையில் 23ம் தேதி பட்டமளிப்பு விழா

நெல்லை பல்கலையில் 23ம் தேதி பட்டமளிப்பு விழா


UPDATED : செப் 20, 2013 12:00 AM

ADDED : செப் 20, 2013 08:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 20, 2013 12:00 AM ADDED : செப் 20, 2013 08:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வரும் 23ம் தேதி நடக்கிறது. இதில் 421 பேருக்கு நேரடியாக பட்டம் வழங்கப்படுகிறது. இவர்களில் 289 பேர் பி.எச்.டி., பட்டம், 132 பேர் பட்டம், தங்கப்பதக்கம் பெறுகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் 21 வது பட்டமளிப்பு விழா வரும் 23ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடக்கிறது. தமிழக கவர்னர் ரோசய்யா தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்குகிறார்.

இந்திய புவிசார் அறிவியல் அமைச்சக முன்னாள் ஆலோசகர் சுப்பிரமணியன் பட்டமளிப்பு விழாப் பேருரை ஆற்றுகிறார். உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், துணைவேந்தர் குமரகுரு, பதிவாளர் (பொறுப்பு) தமிழ்ச்செல்வன், முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

பட்டமளிப்பு விழா ஏற்பாடுகளை பல்கலைக்கழக அலுவலர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர். விழாவில் பங்கேற்க 22ம் தேதி இரவு கவர்னர் நெல்லைக்கு வருகிறார். விழா முடிந்ததும் பல்கலைக்கழக ஹெலிபேட்டில் இருந்து ஹெலிகாப்டரில் கவர்னர் புறப்படுகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us