இந்திய கடல்சார் பல்கலை, ஐ.ஐ.எம்., இணைந்து எம்.பி.ஏ., படிப்பு!
இந்திய கடல்சார் பல்கலை, ஐ.ஐ.எம்., இணைந்து எம்.பி.ஏ., படிப்பு!
UPDATED : டிச 04, 2008 12:00 AM
ADDED : மார் 18, 2009 08:42 AM
நாட்டிலேயே முதன்முறையாக கடல்சார் பல்கலைக்கழகம் நிறுவ மத்திய அரசும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதற்காக சென்னையில் 106 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்திற்கு தமிழக முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார். இப்பல்கலைக்கழக துணைவேந்தராக தேசிய கடல்சார் அகடமி இயக்குனர் டாக்டர். பி.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
‘ரூ.245 கோடி செலவில் பல்கலைக்கழக கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்டடப் பணிகள் வரும் 2010ம் ஆண்டிற்குள் நிறைவடையும்‘ என்று துணைவேந்தர் விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆப் மேனேஜ்மென்ட், அகமதாபாத் உடன் இணைந்து ஓர் ஆண்டு எம்.பி.ஏ., (கடல்சார் மேலாண்மை) படிப்பும், இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆப் மேனேஜ்மென்ட், பெங்களூரு உடன் இணைந்து சான்றிதழ் படிப்பும் வழங்க இப்பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இதுதவிர, சீனாவில் உள்ள தலியன் கடல்சார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து எம்.பி.ஏ., (போர்ட் மேனேஜ்மென்ட்) படிப்பும், சாங்காய் கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் பெல்ஜியத்தில் உள்ள அன்ட்வெர்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து எம்.பி.ஏ., (இன்டர்நேஷனல் டிரான்ஸ்போர்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட்) படிப்பும் வழங்கப்பட உள்ளது.
மேலும், மால்டா பல்கலைக்கழகத்துடன் இணைந்து கடல்சார் சட்டம், நெதர்லாந்தில் உள்ள டெல்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ட்ரெட்ஜிங் ஆகிய பட்டப் படிப்புகளும் வழங்கப்பட உள்ளன.
சென்னையில் அமைய உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், சுவிட்சர்லாந்தில் உள்ள உலக கடல்சார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட முறைகளின்படி பின்பற்றப்பட உள்ளது கூடுதல் சிறப்பு.
