தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காந்திகிராம துணைவேந்தர் பதவி: விண்ணப்பங்கள் குவிந்தன

காந்திகிராம துணைவேந்தர் பதவி: விண்ணப்பங்கள் குவிந்தன

காந்திகிராம துணைவேந்தர் பதவி: விண்ணப்பங்கள் குவிந்தன


UPDATED : செப் 20, 2013 12:00 AM

ADDED : செப் 20, 2013 08:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 20, 2013 12:00 AM ADDED : செப் 20, 2013 08:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: காந்திகிராம பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, 100 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதில் மூவர், மத்திய மனித வளமேம்பாட்டுத் துறைக்கு பரிந்துரைக்கப்படுவர். காந்திகிராம துணைவேந்தராக பணிபுரிந்த ராமசாமி, செப்., 9 ல், விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் துறைத்தலைவர் ஜோசப்துரைராஜ், பொறுப்பு துணைவேந்தராக அறிவிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து வேளாண், கால்நடைகள் பராமரிப்பு துறைத்தலைவர் செந்தில்வேல், "சீனியரான என்னை நியமிக்காமல், வேறு ஒருவரை நியமித்ததற்கு தடை விதிக்க வேண்டும்" என மதுரை ஐகோர்ட் கிளையில், வழக்கு தொடர்ந்தார்; தடை விதித்து, கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து, செப்., 13 ல், பொறுப்பு துணைவேந்தராக செந்தில்வேல், தானாகவே பொறுப்பேற்றுக்கொண்டார். இதை, பதிவாளர் ஏற்கவில்லை. விண்ணப்பம்: துணைவேந்தரை தேர்வு செய்யும் குழு தலைவராக அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, உறுப்பினர்களாக குஜராத் வித்யாபீட துணைவேந்தர் சுதர்சனஅய்யங்கார், முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் உள்ளனர்.

விண்ணப்பங்ளை ஆய்வு செய்து, அதில் மூவரை, மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு பரிந்துரைப்பர்; இவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். இதற்கு, ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என்பதால், பொறுப்பு துணைவேந்தர் சர்ச்சைக்கு, மத்திய அரசு தீர்வு காண வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us