தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் அறை தீ வைத்து எரிப்பு

திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் அறை தீ வைத்து எரிப்பு

திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் அறை தீ வைத்து எரிப்பு


UPDATED : செப் 20, 2013 12:00 AM

ADDED : செப் 20, 2013 08:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 20, 2013 12:00 AM ADDED : செப் 20, 2013 08:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலூர்: வேலூர், திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் அறையை உடைத்து, முக்கிய ஆவணங்களுக்கு, மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

வேலூர் மாவட்டம் சேர்க்காட்டில், திருவள்ளுவர் பல்கலை உள்ளது. இங்கு, துணைவேந்தராக குணசேகரன் உள்ளார். நேற்று காலை, 10:00 மணி அளவில், வேலைக்கு வந்த பேராசிரியர்கள், துணைவேந்தர் அறை உடைக்கப்பட்டு, அறையில் இருந்து புகை வருவதை பார்த்து, துணை பதிவாளர் சரவணனுக்கு தகவல் கொடுத்தனர். அவர், போலீசில் புகார் செய்தார்; தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

முக்கிய ஆவணங்கள், சில கோப்புகள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், முக்கியமான, 25 கோப்புகள் மாயமாயின; துணைவேந்தர் நாற்காலியில், கத்தி ஒன்று இருந்தது. குற்றவாளிகளைப் பிடிக்க, இரு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளன. கை ரேகை நிபுணர்கள், ஆய்வு செய்தனர்.

திருவள்ளுவர் பல்கலை, தற்காலிக பணியாளர்கள், 108 பேரை நிரந்தரம் செய்யாமல், துணைவேந்தர் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு நிலவியது. துணைவேந்தரை கண்டித்து ஊழியர்கள், அடிக்கடி ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக, துணைவேந்தரை மிரட்ட, கோப்புகளுக்கு தீ வைத்ததும், கத்தி வைத்ததும், ஊழியர்களின் செயலாக இருக்கலாம் என, போலீசார் நடத்திய விசாரணையில் தெரிந்தது. பல்கலையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள், அலுவலர்களின் கை ரேகைகளை போலீசார் சேகரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us