தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.பி.எஸ்., இறுதி கட்ட கலந்தாய்வு: அரசுக் கல்லூரிகளில் 75 இடங்கள் ஒதுக்கீடு

எம்.பி.பி.எஸ்., இறுதி கட்ட கலந்தாய்வு: அரசுக் கல்லூரிகளில் 75 இடங்கள் ஒதுக்கீடு

எம்.பி.பி.எஸ்., இறுதி கட்ட கலந்தாய்வு: அரசுக் கல்லூரிகளில் 75 இடங்கள் ஒதுக்கீடு


UPDATED : செப் 21, 2013 12:00 AM

ADDED : செப் 21, 2013 09:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2013 12:00 AM ADDED : செப் 21, 2013 09:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் காலியாக உள்ள, 329 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரியில் நடந்தது.

முதலில், கல்லூரிகளுக்குள் இடமாறுதல் கலந்தாய்வு நடந்தது. பின், அரசு மருத்துவக்கல்லூரிகளில் காலியாக இருந்த 86 இடங்களில் 75 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அரசு கல்லூரிகளில், 11 இடங்களும், சுய நிதி கல்லூரிகளில், 243 இடங்களும் காலியாக உள்ளன. இதற்கான கலந்தாய்வு இன்றும், நாளையும் நடக்கிறது.

விடுமுறை நாளான ஞாயிறு அன்றும் கலந்தாய்வு நடக்கிறது. மதியம் வரை, எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கும், அதன்பின், பி.டி.எஸ்., காலியிடங்களுக்கும் கலந்தாய்வு தொடங்கும். 23ம் தேதி வரை கலந்தாய்வு நடக்க உள்ளது.

தர வரிசைப்பட்டியல் மற்றும் விவரங்களை, www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us