தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிநாட்டுக் கல்வி - உங்களின் சந்தேகங்களுக்கான பதில்கள்

வெளிநாட்டுக் கல்வி - உங்களின் சந்தேகங்களுக்கான பதில்கள்

வெளிநாட்டுக் கல்வி - உங்களின் சந்தேகங்களுக்கான பதில்கள்


UPDATED : செப் 21, 2013 12:00 AM

ADDED : செப் 21, 2013 10:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2013 12:00 AM ADDED : செப் 21, 2013 10:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பை பெற வேண்டுமெனில், நான் அனைத்திலும் முதன்மை மாணவராக இருக்க வேண்டுமா?

பள்ளிப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பது மட்டும் நிபந்தனையல்ல. ஒரு புகழ்பெற்ற வெளிநாட்டு கல்வி நிறுவனத்தில், வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க, பலவிதமான அம்சங்கள் கணக்கில் எடுக்கப்படுகின்றன.

நல்ல டிராக் ரெக்கார்டு, சிறப்பான நோக்க அறிக்கை, வலுவான பரிந்துரைகள் போன்றவை முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன. முக்கிய நாடுகளின் கல்வி நிறுவனங்கள் என்று எடுத்துக்கொண்டாலே, ஆயிரக்கணக்கானவை உள்ளன. அவற்றில் உங்களுக்கு ஒத்துவரக்கூடிய ஒன்றை தேர்ந்தெடுப்பது சற்று சிரமமான காரியம். அதற்கு நீங்கள் அதிகம் மெனக்கெட வேண்டும். இல்லையெனில் மாட்டிக்கொள்வது நீங்கள்தான்.

ஒருவரின் படிப்பு உள்ளிட்ட அனைத்துவிதமான செயல்பாடுகளும் சிறப்பாக இருந்தால், அவருக்கு, பெயர்பெற்ற வெளிநாட்டுப் பல்கலையில் இடம் கிடைக்கும். அதேசமயம், செயல்பாடுகள் சுமாராக இருப்பின், சுமாரான கல்வி நிறுவனங்கள்தான் கிடைக்கும்.

வெளிநாட்டு கல்வி நிறுவனத்தில் இடம்பிடிக்க, அகடமிக் செயல்பாடு தவிர்த்து, வேறு எந்த விஷயங்களில் நான் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்?

ஒவ்வொரு பல்கலைக்கும், மாணவர் சேர்க்கை செயல்பாட்டில் வேறுபட்ட நடைமுறைகள் இருக்கின்றன. தேவையான சில முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு மாணவரைப் பற்றிய சாட்சியம் அளிக்கக்கூடிய ஒரு நல்ல நோக்க அறிக்கை.

அகடமிக் மற்றும் புரபொஷனல் பரிந்துரைகள்

உங்களுடைய நல்ல அம்சங்கள் மற்றும் நீங்கள் பங்கேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவாக தெரிவிக்கக்கூடிய ஒரு விரிவான ரெஸ்யூம்.

தன்னார்வ பணிகளைப் பற்றிய விபரங்கள்

தனிப்பட்ட அல்லது தொலைபேசி வழியான நேர்முகத் தேர்வு. இதன்மூலம், ஒருவரின் மொழி மற்றும் தகவல் தொடர்பு திறனைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.

நான் படிக்க விரும்பும் ஒரு குறிப்பிட்ட வகையான படிப்பு மற்றும் பல்கலையில் படித்த ஒரு பழைய மாணவரை எவ்வாறு கண்டுபிடிப்பது?

LinkedIn, ஏறக்குறைய அனைத்து பல்கலைகளின் பழைய மாணவர் குழுக்களையும் வைத்துள்ளது. எனவே, LinkedIn போன்ற புரபஷனல் அம்சங்கள் மூலமாகவும், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய சமூக தளங்களின் மூலமாகவும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இதைத்தவிர, பல்கலையின் அட்மிஷன் அலுவலகத்தையும் அணுகலாம். அவர்கள், அந்தப் பகுதியின் ஒன்று அல்லது இரண்டு பழைய மாணவர்கள் பற்றிய விபரங்களையாவது தருவார்கள். மேலும், முதல் தர மற்றும் இரண்டாம் தர நிலைகளிலுள்ள உலகின் பிரபலமான பல்கலைகள் அனைத்தும், ஏறக்குறைய உலகின் பெரும்பாலான நாடுகளில், முக்கியமாக, இந்தியா போன்ற நாடுகளில், தங்களின் Representative அலுவலகங்களை வைத்திருக்கும். எனவே, தயக்கமின்றி அவற்றை அணுகினால், சமீபத்தில் தேர்ச்சிபெற்று வெளியேறிய பழைய மாணவர்களின் விபரங்கள் கட்டாயம் கிடைக்கும்.

LinkedIn என்பது, பழைய மாணவர்களிடமிருந்து நேரடி ஆலோசனைகளைப் பெறுவதற்கான ஒரு வலுவான கருவியாகும். இதன்மூலம், உலகெங்கிலும் 22 ஆயிரம் கல்லூரிகள் மற்றும் பல்கலைகள் ஆகியவற்றின் பழைய மாணவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us