தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி., இயக்குனர் நியமனம்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

ஐ.ஐ.டி., இயக்குனர் நியமனம்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

ஐ.ஐ.டி., இயக்குனர் நியமனம்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு


UPDATED : டிச 05, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 05, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
‘ஐ.ஐ.டி., இயக்குனராக, ஆனந்த் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, தாக்கல் செய்த மனுவை விசாரிக்க வேண்டும்’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஐ.ஐ.டி., இயக்குனராக, இரண்டாவது முறையாக டாக்டர் எம்.எஸ்.ஆனந்த் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் டாக்டர் முரளிதரன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
‘சுப்ரீம் கோர்ட்டில் இதே பிரச்னை தொடர்பாக, தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார். சுப்ரீம் கோர்ட் அனுமதி பெறாமல் மீண்டும் இதே பிரச்னைக்காக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய முடியாது’ என ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அப்பீல் மனுவை டாக்டர் முரளிதரன் தாக்கல் செய்தார்.
இதை தலைமை நீதிபதி கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ விசாரித்தது. மனுதாரரான முரளிதரன், ‘வழக்கின் தகுதி அடிப்படையில் எனது மனு தள்ளுபடி செய்யப்படவில்லை. எனவே ஐகோர்ட் தனி நீதிபதியின் உத்தரவை தள்ளுபடி செய்து, எனது மனுவை மீண்டும் விசாரிக்க வேண்டும்’ என்றார்.
மத்திய அரசு சார்பில், மூத்த வக்கீல் பி.சந்திரசேகரன் ஆஜரானார். அப்பீல் மனுவை விசாரித்த ‘முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:
சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றதால் அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வழக்கின் தகுதி பற்றி அதில் விவாதிக்கப்படவில்லை. எனவே, இவ்வழக்கு ஏற்கனவே விசாரிக்கப்பட்டதாகக் கூற முடியாது. ஆகையால், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யத் தடை இல்லை.
இம்மனு விசாரணைக்கு உகந்தது. ஐகோர்ட் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. மனுவை தகுதி அடிப்படையில் விசாரிக்க, நீதிபதி சந்துருவுக்கு அனுப்பப்படுகிறது. இதை நீதிபதி சந்துரு விரைந்து பைசல் செய்வார் என நம்புகிறோம். இவ்வழக்கின் தகுதி குறித்து நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு ‘முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us