தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலை செனட் தேர்தல் தாமதம்: ஐகோர்ட் நோட்டீஸ்

பல்கலை செனட் தேர்தல் தாமதம்: ஐகோர்ட் நோட்டீஸ்

பல்கலை செனட் தேர்தல் தாமதம்: ஐகோர்ட் நோட்டீஸ்


UPDATED : செப் 21, 2013 12:00 AM

ADDED : செப் 21, 2013 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2013 12:00 AM ADDED : செப் 21, 2013 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை செனட் தேர்தல் 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் தாமதப்படுத்துவதாக தாக்கலான வழக்கில், துணைவேந்தருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

செக்கானூரணி பரமன் தாக்கல் செய்த மனு: மதுரை காமராஜ் பல்கலை சென்ட் 15 உறுப்பினர்கள் கொண்டது. செனட் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2010 லிருந்து நடத்தவில்லை. தேர்தலில் பங்கேற்பதற்கான தகுதி எனக்கு உள்ளது. தேர்தல் நடத்தக்கோரி பல்கலை துணைவேந்தர், பதிவாளரிடம் மனு அளித்தேன்.

ஏற்கனவே, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். ஐகோர்ட், "பல்கலை சட்டம், விதிகள்படி தீர்வு காண வேண்டும்," எனக்கூறி பைசல் செய்தது. ஆக., 12 ல் சிண்டிகேட் தேர்தல் நடந்தது. அதுபோல், குறிப்பிட்ட காலத்திற்குள் செனட் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி டி.ராஜா முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் லஜபதிராய் ஆஜரானார். பல்கலை துணைவேந்தர், பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us