தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"மருத்துவக் கல்லூரியின் புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு வர ஒரு மாதமாகும்"

"மருத்துவக் கல்லூரியின் புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு வர ஒரு மாதமாகும்"

"மருத்துவக் கல்லூரியின் புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு வர ஒரு மாதமாகும்"


UPDATED : செப் 22, 2013 12:00 AM

ADDED : செப் 22, 2013 09:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2013 12:00 AM ADDED : செப் 22, 2013 09:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை, சென்ட்ரல் பகுதியில் பழைய மத்திய சிறைச்சாலை இடத்தில் 60 கோடி ரூபாயில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி கட்டடம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. திறக்க ஒரு மாதத்திற்கு மேலாகும் என, தெரிகிறது.

சென்னை சென்ட்ரல் அருகே இருந்த மத்திய சிறைச்சாலை, புழலுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு, சென்னை மருத்துவக் கல்லூரிக்காக 60 கோடி ரூபாயில் ஏழு மாடிகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டது. கட்டுமானப்பணி முடிந்து, இரண்டு மாதத்திற்கு முன், முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

ஆனால், புதிய கட்டடம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. மருத்துவக் கல்லூரி செயல்படும் வகையில், இரண்டு கோடி ரூபாயில் கட்டமைப்பு வசதி செய்ய வேண்டும். அந்தப்பணி இன்னும் முற்று பெறாததால், செயல்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 165ல் இருந்து 250 ஆக உயர்ந்து உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, வகுப்புகள் துவங்கி உள்ள நிலையில், இட நெருக்கடியால் மாணவர் தவித்து வருகின்றனர். இதனால், புதிய கட்டடம் எப்போது திறக்கப்படும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, டீன் கனகசபை கூறியதாவது: மருத்துவமனையில் எட்டு துறைகள் செயல்படும். முதல் தளத்தில் நூலகம், இரண்டாவது தளத்தில் டீன் அலுவலகம், ஆறாவது தளத்தில், தேர்வுக்கூடமும் அமைகிறது. துறைகளுக்கான இடங்கள், மாணவர் ஓய்வறைகளும் அமைய உள்ளன.

இதற்கான, உள் கட்டமைப்பு பணி நடந்து வருகிறது. தளவாடப் பொருட்கள் தற்போது வரத் துவங்கியுள்ளன. இந்தபணி முடிந்து, புதிய மருத்துவக்கல்லூரி கட்டடம் பயன்பாட்டுக்கு வர ஒரு மாதத்திற்கு மேலாகிவிடும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us