தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசுக் கல்லூரிகளில் நூலகர் பணி: காலியிடங்களுக்கு விடிவு வருமா?

அரசுக் கல்லூரிகளில் நூலகர் பணி: காலியிடங்களுக்கு விடிவு வருமா?

அரசுக் கல்லூரிகளில் நூலகர் பணி: காலியிடங்களுக்கு விடிவு வருமா?


UPDATED : செப் 22, 2013 12:00 AM

ADDED : செப் 22, 2013 09:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2013 12:00 AM ADDED : செப் 22, 2013 09:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள நூலகர் பணிகளை நிரப்ப தேர்வு நடத்தி மூன்றாண்டுகளாகியும், இதுவரை இப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

தமிழகத்தில் 62 அரசு கல்லூரிகள் உள்ளன. இதில், லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். ஒவ்வொரு கல்லூரியிலும் நூலகம் உண்டு. கல்லூரிகளில் பொது நூலகம் மட்டுமல்லாமல்,ஒவ்வொரு துறையும் தனித்தனியாக நூலகங்களை பராமரித்து வருகின்றன. நூலகத்தில் தலா ஒரு நூலகரும், நூலக உதவியாளரும் பணிபுரிந்து வருகின்றனர்.

28 பணியிடம்

தமிழகத்தில் 58 கல்லூரிகளில் நூலகர் பணியிடங்கள் காலியாக உள்ளன என, அரசு அறிவித்தது. இந்நிலையில், உதவி நூலகர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி 58 நூலகர் பணி இடங்களில் 30 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

மீதமுள்ள 28 நூலகர் பணியிடங்களை நிரப்ப 2010 ஜூன் 20ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., மூலம் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவுகள், 2012 மார்ச் 13ம் தேதி வெளியாகின. நூலகர் பணிக்கான நேர்முக தேர்வு 2012 மார்ச் 28ம் தேதி நடத்தப்பட்டு, முடிவுகள் அன்றே வெளியாகின. இறுதி தேர்வு முடிவுகள், கடந்த மார்ச் 5ம் தேதி வெளியாகின.

மூன்றாண்டுகளாக தேர்வு

கடந்த மூன்றாண்டாக தேர்வு பணி நடத்தி நூலகர்களை தேர்வு செய்தும் இதுவரை நூலகர்கள் பணியமர்த்தப்படவில்லை. பெரும்பாலான கல்லூரிகளில் நூலகர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் நூல்கள் பராமரிப்பின்றி கிடக்கின்றன.

இதுகுறித்து தேர்வு எழுதி, பணிக்காக காத்திருக்கும் நூலகர் ஒருவர் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி., நடத்திய தேர்வுகளில், இறுதி முடிவு வெளியான ஓரிரு மாதங்களில் தேர்வர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். ஆனால், நூலகர் தேர்வு பணிகளில் நீண்ட இழுபறி நிலவுகிறது. பணி தாமதம் குறித்து கல்லூரி கல்வி இயக்குனரகத்தில் முறையிட்டால், தலைமை செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து தகவல் கேட்க கல்லூரி கல்வி இயக்குனரை பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பதிலளிக்க மறுத்து விட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us