தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுச்சேரியில் அதிகரித்துள்ள பழைய புத்தகக் கடைகள்

புதுச்சேரியில் அதிகரித்துள்ள பழைய புத்தகக் கடைகள்

புதுச்சேரியில் அதிகரித்துள்ள பழைய புத்தகக் கடைகள்


UPDATED : செப் 23, 2013 12:00 AM

ADDED : செப் 23, 2013 10:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2013 12:00 AM ADDED : செப் 23, 2013 10:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அபூர்வமான பழைய புத்தகங்களை தேடி அலைபவர்களுக்கு, புதுச்சேரியில் உள்ள பழைய புத்தகக் கடைகள் பேருதவியாக இருந்து வருகிறது.

பல்கலைக் கழகம், கல்லூரியில் பயிலும் மாணவர்கள், ஆய்வாளர்கள், தீவிர புத்தக வாசிப்பாளர்கள் என பல தரப்பினரும், பழைய நூல்களை தேடி பழைய புத்தக கடைகளை நாடி வரும் நிலை இன்றளவும் உள்ளது. பெரிய, பெரிய நூலகங்களில் கூட கிடைக்காத, அரிய புத்தகங்கள் பழைய புத்தகக் கடைகளில் கிடைக்கிறது.

தினம் தினம் புதிய புத்தகங்கள் வெளி வந்து கொண்டிருந்தாலும், வாசகர்களின் தேடல் அதிகரித்துக்கொண்டேதான் உள்ளது. அந்த வகையில், அவர்களின் தேடலை பழைய புத்தக கடைகள் நிவர்த்தி செய்து வருகிறது.

புதுச்சேரியில் சண்டே மார்க்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக பழைய புத்தகக் கடைகள் பெருகியுள்ளன. இந்த கடைகளில் தூசு படிந்திருந்தாலும் மணிக்கணக்கில் தங்களுக்கு தேவையான புத்தகங்களை தேடுகின்றனர். அவற்றின் விலை பற்றி பொருட்படுத்தாமல் காணாமல் போன பொக்கிஷம் திரும்ப கிடைத்ததை போன்று மனதிருப்தியுடன், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வாங்கி செல்வதை வாரந்தோறும் காணமுடிகிறது.

பழைய புத்தக கடைக்காரர் வளையாபதி கூறுகையில் "கடந்த 15 ஆண்டுகளாக பழைய புத்தக வியாபாரம் செய்கிறேன். புத்தகங்களை உயிருக்கு உயிராக நேசிப்பவர்கள் பலரை நான் அறிவேன். புத்தகங்களை சேகரிப்பதை காட்டிலும், அவற்றை பாதுகாப்பது சவாலான விஷயம்.

அழுக்கு, வெள்ளி பூச்சுகள், ஒட்டடை, தூசி என புத்தகத்தை பாழாக்க பல எதிரிகள் உள்ளன. இடம் பெயர்ந்து செல்பவர்கள் புத்தகங்களை விற்றுவிட்டு செல்வர். அந்த புத்தகங்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறேன். பெரிய அளவில் லாபம் இல்லாவிட்டாலும், புத்தகங்களை தேடி வருபவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது திருப்தி அளிக்கிறது" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us