தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் புத்தகம் பற்றாக்குறை

போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் புத்தகம் பற்றாக்குறை

போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் புத்தகம் பற்றாக்குறை


UPDATED : செப் 24, 2013 12:00 AM

ADDED : செப் 24, 2013 08:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2013 12:00 AM ADDED : செப் 24, 2013 08:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: நாமக்கல் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையத்தில், புத்தகங்கள் பற்றாக்குறையால், நிதி ஒதுக்கீடு கிடைப்பதில், தாமதம் ஏற்பட்டு வருகிறது.

பொது நூலகத் துறையின், மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில், கிளை நூலகம் மற்றும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கட்டிடம் கட்டப்பட்டு, கடந்தாண்டு, ஜூலை மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட போட்டித் தேர்வில், அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக, நூலகத்துறைக் கட்டுப்பாட்டில், தன்னார்வ அமைப்புகளின் உதவியோடு, மாணவர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனர்.

இம்மையத்தில், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள், 50க்கும் மேற்பட்ட வார, மாத இதழ்கள், போட்டித் தேர்வுக்கான, 1,810 புத்தகங்கள் உள்ளன. தினமும், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், படித்துச் செல்கின்றனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ஆறு சிறப்பு பயிற்சியாளர்கள், மாணவர்களுக்கு, காலை, 10 மணி முதல், 5 மணி வரை வகுப்புகள் எடுக்கின்றனர்.

ஓராண்டாக செயல்பட்டு வரும் மையத்தில், சிலர் டி.என்.பி.எஸ்.ஸி., நடத்திய போட்டித் தேர்வுகளில் வெற்றியடைந்து, அரசுப் பணிக்கு சென்றுள்ளனர். இருந்தும், நடப்பு செய்திகள், காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை தருகிற புத்தகங்கள் பற்றாக்குறை, அடிப்படை வசதிகள் இல்லாததால், போட்டியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மாணவர்கள் சிலர் கூறியதாவது: நூலகத்தில் உள்ள புத்தகங்களின் விபரங்கள், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த புத்தகம் தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ள, மின்தடை நேரத்தில் சிரமமாக உள்ளது. கம்ப்யூட்டர் இயங்குவதற்கான யு.பி.எஸ்., வசதி ஏற்படுத்த வேண்டும். ஆன்-லைனில், போட்டித் தேர்வு விண்ணப்பங்களை பதிவு செய்தல், ஹால் டிக்கெட் பெறுதல் வசதிக்காக, பிரிண்டர் வசதி வேண்டும். தேவையான புத்தகத்தின் பக்கங்களை, கட்டணத்துடன் ஜெராக்ஸ் எடுக்க, ஒரு ஜெராக்ஸ் இயந்திரம் வேண்டும்.

முக்கியமாக, தரமான போட்டித் தேர்வுக்கான கட்டமைப்பு வசதிகள் இருந்தும், புத்தகங்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இந்த பிரச்னைகள் யாவும், அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நூலக அலுவலர் ஒருவர் கூறியதாவது: போட்டித் தேர்வுக்கான தரமான பதிப்புகள் மற்றும் ஆசிரியர்களால் எழுதப்பட்ட புத்தகங்கள் தேவைகள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், பொது அறிவு, பாடவாரியான புத்தகங்கள், நுழைவு தேர்வு, நேர்முக தேர்வு, நிர்வாகம், மொழி, ரயில்வே, வங்கி, யு.சி.சி., யு.பி.எஸ்.சி., கட்டுரை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளை கொண்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் தேவை என பொது நூலகத் துறைக்கு, நான்கு மாதங்களுக்கு முன், கடிதம் வைக்கப்பட்டது.

அதேபோல், ஜெராக்ஸ் மெஷின், பிரிண்டர், யு.பி.எஸ்., வசதிகள் குறித்தும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பொது நூலகத்துறை நிதி அல்லது மாவட்ட நிர்வாக நிதி என, இரண்டில் ஏதாவது ஒரு நிதியில் இருந்து புத்தகங்கள் வாங்கலாம்.

ஆனால், எந்த நிதியில் வாங்குவது என்பது குறித்து, எந்த உத்தரவும் பொதுநூலகத்துறை வெளியிடவில்லை. அதனால், சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் தலையிட்டு, புத்தகம், அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தால் தான் தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us