தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழிற்கல்வியில் நவீன பாடத்திட்டம்: உருவாக்க வலியுறுத்தி உண்ணாவிரதம்

தொழிற்கல்வியில் நவீன பாடத்திட்டம்: உருவாக்க வலியுறுத்தி உண்ணாவிரதம்

தொழிற்கல்வியில் நவீன பாடத்திட்டம்: உருவாக்க வலியுறுத்தி உண்ணாவிரதம்


UPDATED : செப் 24, 2013 12:00 AM

ADDED : செப் 24, 2013 10:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2013 12:00 AM ADDED : செப் 24, 2013 10:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: "தொழிற்கல்வியில், நவீன பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, ஆசிரியர்கள் சங்கத்தினர், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின், மேற்கு மண்டல அளவில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நாமக்கல்லில் நேற்று நடந்தது.

போராட்டத்தில், மேல்நிலைப் பள்ளிகளில், தொழிற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் பெறப்போகும் ஆசிரியர்களுக்கு, ஓய்வூதியம் வழங்கும் வகையில், அரசாணை வெளியிட வேண்டும். தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

தொழிற்கல்வி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் பெறக்கூடியவர்கள் என, ஒரு நபர் குழுவில் தெரிவித்துள்ளபடி, திருத்தம் செய்யப்பட்ட தர ஊதியம் வழங்க வேண்டும். தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும், தொழிற்பிரிவு பாடப்பிரிவுகளை துவங்கி, புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். மேல்நிலைக் கல்வியில், தற்போதுள்ள பாடப்பிரிவை மாற்றி, புதிய பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, பணி விதி மற்றும் பணி வரன்முறை உருவாக்க வேண்டும்.

மற்ற ஆசிரியர்களுக்கு இருப்பது போல், ஆசிரியர் கலந்தாய்வு, பதவி உயர்வு வழங்க வேண்டும். போராட்ட கால ஊதிய இழப்பினை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us