UPDATED : செப் 25, 2013 12:00 AM
ADDED : செப் 25, 2013 08:39 AM
அ நிறம் | அளவு
கோல்கட்டா: கோல்கட்டா பல்கலைக் கழகத்துக்குட்பட்ட, கல்லூரி மாணவர்களுக்கு, வளாகத் தேர்வின் போது, வேலைவாய்ப்புகள் வழங்கப்படாததைக் கண்டித்து, நேற்று முன்தினம், பல்கலைக்கழக வேந்தர்கள் இருவரை, மாணவர்கள் முற்றுகையிட்டு, பின் சிறைபிடித்தனர்.
மாணவர்களுக்கு வேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, பல்கலைக்கழகம் உறுதி அளித்ததை அடுத்து, இருவரும், 16 மணி நேரத்திற்குப் பின், நேற்று விடுவிக்கப்பட்டனர்.
