தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வாக்காளர் பட்டியலில் கல்லூரி மாணவர்களை சேர்க்க புதிய முடிவு

வாக்காளர் பட்டியலில் கல்லூரி மாணவர்களை சேர்க்க புதிய முடிவு

வாக்காளர் பட்டியலில் கல்லூரி மாணவர்களை சேர்க்க புதிய முடிவு


UPDATED : செப் 26, 2013 12:00 AM

ADDED : செப் 26, 2013 09:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2013 12:00 AM ADDED : செப் 26, 2013 09:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கல்லூரி மாணவ, மாணவியரின் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக, அரசியல் கட்சி சார்பற்ற, மாணவர் ஒருவரை, தேர்தல் கமிஷன் பிரதிநிதியாக நியமிக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் நேற்று கூறியதாவது: தமிழகத்தில், வாக்காளர் பட்டியல், சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணி, அக்., 1ம் தேதி துவங்குகிறது. இப்பணியில் ஈடுபடும், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு உதவி செய்ய, அங்கீகாரம் பெற்ற, அரசியல் கட்சிகள் சார்பில், பூத் ஏஜன்ட் நியமிக்கும்படி கூறி உள்ளோம். அவர், வாக்காளர் பட்டியலில் உள்ள, தவறுகளை சுட்டிக்காட்டலாம்.

ஒரு நாளுக்கு, 10 பேரின் விண்ணப்பங்களை அளிக்கலாம். ஆனால், மாதத்திற்கு, 30 விண்ணப்பங்கள் வரை மட்டுமே அளிக்க முடியும். விண்ணப்பங்களைக் கொடுக்கும் பூத் ஏஜன்ட், அவை உண்மையானவை என, சான்றிதழ் வழங்க வேண்டும். தவறானவையாக இருந்தால், அவர் மீது போலீஸ் நிலையத்தில், புகார் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்படும்.

வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது, தவறு ஏற்பட வாய்ப்பிருக்காது. விண்ணப்பதாரர் கொடுக்கும் தகவல், புகைப்படம் அப்படியே, அடையாள அட்டையில் பதிவு செய்யப்படும்.

தற்போது, ஆன்–லைனில், 7 சதவீதம் பேர் மட்டுமே பதிவு செய்கின்றனர். இந்த எண்ணிக்கையை, 50 சதவீதமாக அதிகரிப்பதற்காக, 1,000 இணையதள மையங்களுடன், ஒப்பந்தம் செய்துள்ளோம். கம்ப்யூட்டர் வசதி இல்லாதோர், இணையதள மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

தமிழக மக்கள் தொகையில், 18 முதல், 19 வயதிற்குட்பட்டோர், 3.6 சதவீதம் உள்ளனர். இவர்களில், 2.24 சதவீதம் பேர், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மற்றவர்களையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, கல்லூரிகளில் வாக்காளர் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. முன்பு, கல்லூரிகளில் என்.சி.சி., –- என்.எஸ்.எஸ்., அலுவலர் அல்லது ஆசிரியர்கள், மாணவர்களின் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க உதவினர்.

தற்போது புதிதாக, அனைத்து கல்லூரிகளிலும், தேர்தல் கமிஷன் சார்பில், மாணவர் பிரதிநிதி ஒருவரை நியமிக்க முடிவு செய்துள்ளோம். கல்லூரி நிர்வாகமே, கட்சி சார்பற்ற மாணவர் ஒருவரை தேர்வு செய்து, பரிந்துரை செய்தால், அவரை நியமிக்கிறோம். இதுவரை, 1,059 கல்லூரிகளில் இருந்து, விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இது தொடர்பான விவரத்தை, அனைத்து கல்லூரிகளுக்கும் தெரியப்படுத்த, கல்லூரி முதல்வர்களின் கூட்டத்தை கூட்டும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வகையான கல்லூரிகளிலும், மாணவர் பிரதிநிதியை நியமிக்க உள்ளோம். அவர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும், மாணவ, மாணவியரிடம் விண்ணப்பங்கள் பெற்று, மண்டல தேர்தல் அதிகாரியிடம் வழங்குவார். அந்த விண்ணப்பங்கள் ஆய்வுக்கு பிறகு, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us