தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போராட்டத்துக்கு யார் தூண்டுதலும் காரணமல்ல: பார்வையற்ற மாணவர் உறுதி

போராட்டத்துக்கு யார் தூண்டுதலும் காரணமல்ல: பார்வையற்ற மாணவர் உறுதி

போராட்டத்துக்கு யார் தூண்டுதலும் காரணமல்ல: பார்வையற்ற மாணவர் உறுதி


UPDATED : செப் 26, 2013 12:00 AM

ADDED : செப் 26, 2013 09:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2013 12:00 AM ADDED : செப் 26, 2013 09:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: எங்கள் போராட்டம் யார் தூண்டுதலினாலும் நடத்தப்படவில்லை; அரசுக்கு எதிரானதும் அல்ல. எங்கள் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் தான் தொடர்கிறோம்&' என, பார்வையற்ற கல்லூரி மாணவர், பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பார்வையற்ற கல்லூரி மாணவர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், 16ம் தேதி முதல், வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற உண்ணாவிரதம், மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்கள் கைது செய்யப்படுவதும், பின் விடுவிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி நடத்திய பேச்சிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, ஆசிரியர் தேர்வு வாரியத்தை, இவர்கள் முற்றுகையிட்டனர். பின், கோட்டை நோக்கிச் செல்ல முயன்ற 165 பேரை, நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து, பார்வையற்ற கல்லூரி மாணவர் மற்றும் பட்டதாரிகள் சங்க பொதுச்செயலர், வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எங்கம் சங்கம், 1980ல் துவங்கப்பட்டு, 33 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது; 2,250க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். யார் தூண்டுதலாலும் போராட்டம் நடத்தப்படவில்லை; அரசுக்கு எதிரான போராட்டமும் அல்ல. முதல்வரின் கவனத்திற்கு எங்களின் நியாயமான கோரிக்கைகளை கொண்டு செல்லும் வகையிலும், நியாயமான உரிமைகளைப் பெறும் வகையிலும் தான் போராட்டம் நடத்தி வருகிறோம். முதல்வர், எங்கள் பிரதிநிதிகளை அழைத்து பேசி, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்ற ஒரே நம்பிக்கையில் போராடிக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற பட்டதாரிகள், ஒன்பது பேர், சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று மாலை, சந்தித்துப் பேசினார். பின் நிருபர்களிடம் கூறுகையில், "பார்வையற்ற பட்டதாரிகளின் நியாயமான கோரிக்கையை அரசு பரிசீலித்து, விரைந்து தீர்வு காண வேண்டும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us