UPDATED : செப் 26, 2013 12:00 AM
ADDED : செப் 26, 2013 10:20 AM
திருப்போரூர்: பள்ளிகளுக்கு, காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், கோவளம் கடற்கரை மற்றும் முட்டுக்காடு படகு குழாமில், சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து உள்ளது.
கோவளத்தில், இயற்கை எழில் நிறைந்த கடற்கரை உள்ளது. இங்கு, விடுமுறை தினங்கள் மற்றும் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ பண்டிகை நாட்களில், ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
பள்ளிகளில், காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், கோவளம் கடற்கரையில் கூட்டம் அதிகரித்து உள்ளது. பயணிகள் கடற்கரை ஓரம் நின்று அலையில் குளித்து மகிழ்ந்தனர்.
முட்டுக்காடு சுற்றுலா கழக படகு குழாமில், துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் பயணிக்க, நூற்றுக்கணக்கில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது.
