தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுகை மன்னர் கல்லூரிக்கு காலவரையின்றி விடுமுறை

புதுகை மன்னர் கல்லூரிக்கு காலவரையின்றி விடுமுறை

புதுகை மன்னர் கல்லூரிக்கு காலவரையின்றி விடுமுறை


UPDATED : செப் 26, 2013 12:00 AM

ADDED : செப் 26, 2013 10:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2013 12:00 AM ADDED : செப் 26, 2013 10:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் தொடரும் மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து கல்லூரிக்கு காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அரசு மாமன்னர் கல்லூரியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர்.

கல்லூரியில் போதிய கழிப்பறை வசதிகள் வேண்டும், இருக்கின்ற கழிப்பறைகளை முறையாக சுத்தம் செய்யவேண்டும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வேண்டும். கல்லூரி வளாகத்தில் துப்புரவு பணிகள் மூலம் குப்பைகள் தேங்குவதை தடுக்கவேண்டும்.

கேன்டீனில் தரமான உணவு வகைகள் நியாயமான விலையில் வழங்க வேண்டும். விடுதிகளில் தரமான உணவு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் அவ்வப்போது வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றும் (25ம் தேதி) மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுடன் கல்லூரி நிர்வாகத்தினர், வருவாய்த்துறையினர் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் வகுப்புகளுக்கு திரும்ப மாணவர்கள் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து காலவரையின்றி கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் மனோகரன் அறிவித்தார்.

விடுதிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதால் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்புடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us