மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தொழில் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தொழில் பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு
UPDATED : செப் 26, 2013 12:00 AM
ADDED : செப் 26, 2013 10:52 AM
விருதுநகர் : "மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறுகியகால தொழிற்திறன் மேம்பாட்டு பயிற்சி, உதவித்தொகையுடன் வழங்குவதற்காக, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுபதாக," கலெக்டர் ஹரிஹரன் கூறினார்.
கலெக்டர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கு, 2013-2014ம் நிதியாண்டிற்கு குறுகியகால இலவச தொழிற்திறன் மேம்பாட்டு பயிற்சி, சூலக்கரை அரசு தொழிற்பயிற்சி நிலையம் மூலம் வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகளிடமிருந்து, பேஸிக் பிட்டிங் மேசர்மென்ட், பேஸிக் வுட் ஒர்க்கிங், பேஸிக் ஆட்டோமோட்டிவ் சர்வீசிங்(நான்கு சக்கர வாகனம்) பேஸிக் ஆட்டோமோட்டிவ் சர்வீசிங்(இரண்டு, மூன்று சக்கர வாகனம்) ரிப்பேர் மற்றும் ஓவராயிலிங்(இரண்டு சக்கர வாகனம்) போன்றவற்றில், சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
5ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊனத்தின் தன்மை 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை இருக்க வேண்டும். தேசிய அடையாள அட்டை பெற்றிக்க வேண்டும். இவற்றிக்கு பயிற்சிக் கட்டணம் இலவசம். சிறு உபகரணங்கள் வாங்க உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும் பேஸிக் எலக்ட்ரிக்கல், பேஸிக் டர்னிங், பேஸிக் மில்லிங், பேஸிக் வெல்டிங் மற்றும் ஏ.ஆர்.சி., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு, 8ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊனத்தின் தன்மை 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை இருக்க வேண்டும்.
மேற்கண்ட பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான விண்ணப்பத்தை விருதுநகரிலுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இலவசமாக, நேரடியாக பெற்று பூர்த்தி செய்து, செப்.,28க்குள் விண்ணப்பித்து பயனடைய வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
