தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்கள் அதிகரிப்பு: சமூக விரோதிகளாய் மாறும் அவலம்

கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்கள் அதிகரிப்பு: சமூக விரோதிகளாய் மாறும் அவலம்

கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்கள் அதிகரிப்பு: சமூக விரோதிகளாய் மாறும் அவலம்


UPDATED : செப் 26, 2013 12:00 AM

ADDED : செப் 27, 2013 09:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2013 12:00 AM ADDED : செப் 27, 2013 09:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை திருப்புவனம் வைகை ஆறு, மேம்பாலம், தண்ணீர் தொட்டி, மடப்புரம் காளிகோயில் ஆற்றுப்படுகைகளில் சிலர் கஞ்சா விற்கின்றனர். இவ்வழியே செல்லும் இளைஞர்கள், மாணவர்கள், கஞ்சாவுக்கு அடிமையாகின்றனர்.

கஞ்சா வியாபாரிகள் சிலர், போலீசார் சந்தேகப்படாத வகையில், பள்ளி மாணவர்கள் மூலம் நூதனமாய் விற்கின்றனர். கஞ்சா பற்றி தெரியாத மாணவர்கள் ஆற்றுக்குள் மறைந்திருந்து குடிக்கும் கஞ்சா கிராக்கிகளிடம் சிக்கி அப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.

கல்லூரி மாணவர்கள், இளைஞர்களும் ஆற்றோரம் புதருக்குள் மறைந்திருந்து குடிக்கின்றனர். தொடர்ந்து குடிப்பதால், மனநிலை பாதிக்கப்பட்டு கு(கொ)ரூர புத்திக்காரர்களாக மாறுகின்றனர்.

ஒரு கஞ்சா பொட்டலம் ரூ. 80லிருந்து 150 வரை விற்கப்படுகிறது. கையில் பணம் இல்லாத நிலையில் ஆற்றை கடந்து மடப்புரம் காளிகோயிலுக்கு செல்லும் பெண் பக்தர்களை மிரட்டி வழிப்பறி செய்கின்றனர். நாளடைவில், கத்தி, வாள் கத்தி போன்ற ஆயுதங்களால் மிரட்டியும் பணம் பறிக்கின்றனர்.

மேலும், இயற்கை உபாதைக்காக ஒதுங்கும் பெண்களை, பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு மூர்க்கத்தனமாய் மாறுகின்றனர். எனவே, தாராளமாய் கிடைக்கும் கஞ்சா புழக்கத்தை தடுக்கவும், கஞ்சா வியாபாரிகளை கைது செய்யவும், திருப்புவனம் போலீசார் முன்வரவேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us