போலீசாருக்கு உதவும் கல்லூரி மாணவர்களுக்கு ஹுண்டாய் உதவி
போலீசாருக்கு உதவும் கல்லூரி மாணவர்களுக்கு ஹுண்டாய் உதவி
UPDATED : டிச 06, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: சென்னை நகரில் போக்குவரத்து பணியில் போலீசாருடன் இணைந்து செயல்படும் கல்லூரி மாணவர்களுக்கு, ஹுண்டாய் கார் நிறுவனம் மாதந்தோறும் ஊக்கத் தொகை வழங்கி வருகிறது.
சென்னையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசாருடன் இணைந்து கல்லூரி மாணவர்கள் செயல்படும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. போலீசாருடன் இணைந்து செயல்படும் கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும், ரூ.1,650 ஊக்கத்தொகை வழங்க ‘ஹுண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன்’ நிறுவனம் முன்வந்தது.
பல கல்லூரிகளில் என்.சி.சி., படையில் சேர்ந்துள்ள ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் போலீசாருடன் இணைந்து பணியாற்ற பயிற்சியளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு ஹுண்டாய் நிறுவனம் சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா கமிஷனர் அலுவலகத்தில் டிச. 5ம் தேதி நடந்தது.
ஹுண்டாய் நிறுவன ஆலோசகரான முன்னாள் டி.ஜி.பி., கணபதி, பொது மேலாளர் (நிர்வாகம்) லயோலா, பவுண்டேசன் மேலாளர் ஸ்ரீதர், மக்கள் தொடர்பு அதிகாரி சத்தியசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.
கமிஷனர் ராதாகிருஷ்னண், கூடுதல் கமிஷனர் விஸ்வநாதன், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுனில்குமார், கூடுதல் துணை கமிஷனர் பீட்டர், உதவி கமிஷனர் கந்தசாமி ஆகியோர் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி, மக்கள் பணியில் ஈடுபட உற்சாகப்படுத்தினர்.
