செங்கல்பட்டில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி
செங்கல்பட்டில் தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி
UPDATED : டிச 08, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ஐந்தாவது ஆண்டாக டிச. 6ம் தேதி தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடந்தது.
காலை 8 மணிக்கு 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான நிகழ்ச்சி துவங்கியது. அறிவியல் ஆசிரியர் மோகன்தாஸ், சமூக அறிவியல் ஆசிரியர் யுவராஜ், ஆங்கில ஆசிரியர் ஆனந்தன், தமிழாசிரியர் மதியழகன், கணித ஆசிரியர் கேசவன் ஆகியோர் ஒவ் வொரு பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது எப்படி என்பதை எளிய நடையில் விளக்கினர்.
தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி, 60 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவது எப்படி, 75 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவது எப்படி, 90 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவது எப்படி என தனித்தனியே விளக்கினர். ஒவ்வொரு பாடத்திலும் எத் தனை மதிப்பெண்களுக்கு கேள்விகள் வரும் என்ற விவரத்தையும் தெரிவித்தனர்.
மாணவர்கள் ஆர்வமுடன் ஆசிரியர்கள் கூறியதை குறிப்பெடுத்தனர். தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ்பிரபா ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கினர்.
பகல் 11 மணிக்கு 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான நிகழ்ச்சி முடிந்தது. ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காலையிலே குவிந்த பிளஸ் 2 மாணவ, மாணவியர் பகல் 11.30 மணிக்கு அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இயற்பியல் ஆசிரியர் கோபிஆனந்தன், வேதியியல் ஆசிரியர் பாலசுப்பிரமணியன், கணித ஆசிரியர் பத்மநாபன், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆசிரியர் கனகசபை, கம்ப்யூட்டர் அறிவியல் ஆசிரியர் ரமேஷ், பொருளியல் மற்றும் வணிகவியல் ஆசிரியர் சீனிவாசன், கணக்குப் பதிவியல் ஆசிரியர் ஸ்ரீராமன், வணிகக்கணிதம் ஆசிரியர் பத்மநாபன் ஆகியோர் ஒவ்வொரு பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது எப்படி என மாணவர்களுக்கு விளக்கினர். மாணவர்களுடன் வந்திருந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர் களும் ஆர்வமுடன் குறிப்பெடுத் தனர். மாலை நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
கிராமப்புற மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு: செங்கல்பட்டு நகரில் நடந்த, தினமலர் ஜெயித் துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் கிராமப்புற மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளி ஆசிரியர்களுடன் ஆர்வமாக கலந்து கொண்டனர். செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு, ஆத்தூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக் குன் றம், சீத்தனாஞ்சேரி, மதுராந்தகம், செய்யூர், சூணாம்பேடு, சித்தாமூர், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், புத்திரன்கோட்டை, ஓனம்பாக்கம், பாலூர், ஒரத்தி, செம்பாக்கம், சிங்கபெருமாள் கோவில், பொலம்பாக்கம், கூத்தவாக்கம், பையனூர், இள்ளலூர், கடப்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் குவிந்தனர்.
ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் வேன், பஸ், ஆட்டோ, மோட்டார் சைக்கிள், சைக்கிள் எனப் பல்வேறு வாகனங்களில் வந்தனர். செங்கல்பட்டு ஜி.எஸ்.டி சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்ற மாணவ, மாணவிகளைக் கண்டு பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.
அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு மாணவர்களுக்காக பிரத்யேகமாக எழுதிய ஜெயித்துக் காட்டுவோம் என்ற வழிகாட்டி புத்தகம், தேர்வில் வரும் முக்கிய வினாக்கள், புளூ பிரின்ட் புத்தகம், உடல் நலம் பாதுகாப்பு குறித்த புத்தகம், தினமலரின் கம்ப்யூட்டர் சிறப்பிதழ், குறிப்பெடுக்க நோட்டு, பேனா ஆகியவை வழங்கப்பட்டது.
