தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளியில் வசூல் வேட்டை? பெற்றோர் கொந்தளிப்பு

அரசு பள்ளியில் வசூல் வேட்டை? பெற்றோர் கொந்தளிப்பு

அரசு பள்ளியில் வசூல் வேட்டை? பெற்றோர் கொந்தளிப்பு


UPDATED : டிச 08, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கூடுதல் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும், பள்ளியை நிர்வகிக்கவும் மாணவிகளிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முற்றிலும் இலவச கல்வி வழங்கப்படுகிறது. குறிப்பாக, தமிழ் வழியில் பயிலும் மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படக்கூடாது. ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களிடம் மட்டும் கல்வி கட்டணமாக குறைந்த தொகை வசூலிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக வசூலிக்கப்பட்டு வந்த சிறப்புக் கட்டணங்களும் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டன.
ஆனால், சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 1,200க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். இவர்களில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளிடம் அரசு விதிமுறைப்படி கட்டணம் வசூலிக்கக் கூடாது. ஆனால், 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக பெற்றோர் கள் புகார் எழுப்பியுள்ளனர்.
ஆங்கில வழி கல்விக்கு அரசு நிர்ணயித்துள்ளபடி 6 முதல் 8ம் வகுப்பு வரை மாணவிகளிடம் 200 ரூபாயும், 9, 10ம் வகுப்பு மாணவிகளிடம் 250 ரூபாயும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவிகளிடம் 500 ரூபாயும் கல்விக் கட்டணமாக வசூலிக்க வேண்டும். ஆனால், பிளஸ் 1, பிளஸ் 2 கட்டணங்கள் 975 ரூபாயாகவும், 9, 10 வகுப்புகளுக்கு 675 ரூபாயும் பள்ளி நிர்வாகம் வசூல் செய்வதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு பள்ளியில் கட்டணம் வசூல் செய்யும் விவகாரம், சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் விஸ்வநாதன் கூறியதாவது:
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் வணிகவியல், தாவரவியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கு ஆசிரியர்கள் கூடுதலாக தேவைப்படுகின்றனர். அந்த பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நிரப்பியுள்ளோம். ஆசிரியர் அல்லாத சில பணியிடங்களையும் நிரப்பியுள்ளோம். மொத்தத்தில் 10 பேருக்கு மாதந்தோறும் சம்பளம் கொடுக்க வேண்டும். நாங்கள் என்ன செய்ய முடியும்?
மாணவிகளிடம் இருந்து கல்விக் கட்டணம் இல்லாமல் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வசூலிக்கிறோம். இந்த பணத்தைக் கொண்டு, கூடுதலாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கிறோம். பள்ளியை சுத்தம் செய்வதில் இருந்து மற்ற பணிகளுக்காகவும் செலவிடுகிறோம். எல்லாவற்றுக்கும் கணக்கு வைத்திருக்கிறோம்.
மாணவிகளிடம் அவ்வப்போது பணம் வசூல் செய்வதில்லை. கல்வியாண்டு துவங்கியதும் ஒரு முறை தான் வசூலிக்கிறோம். அந்த பணத்தை தான் ஆண்டு முழுவதற்கும் பள்ளியை நிர்வகிக்க செலவிடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிக் கல்வித் துறையில் இருந்தும், அனைவருக்கும் கல்வி திட்டத்தில் இருந்தும், அரசு பள்ளிகள் மேம்பாட்டுக்காக கோடி, கோடியாக செலவிடப்படுகிறது. அப்படியிருந்தும், சாதாரண, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் லட்சக்கணக்கில் வசூல் செய்யப்படுவது பெற்றோரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us