தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நடுநிலைப் பள்ளிகளுக்கும் ‘லேப்-டாப்’ வழங்க அரசு முடிவு

நடுநிலைப் பள்ளிகளுக்கும் ‘லேப்-டாப்’ வழங்க அரசு முடிவு

நடுநிலைப் பள்ளிகளுக்கும் ‘லேப்-டாப்’ வழங்க அரசு முடிவு


UPDATED : டிச 09, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 09, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு பள்ளிகளை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்ற, பல்வேறு நடவடிக்கையை மாநில கல்வித்துறை எடுத்து வருகிறது. அரசு பள்ளிகளில், படிக்கும் மாணவர்கள், ஆங்கிலத்தில் புலமை குறைவாக உள்ளனர் என்பதை போக்கும் வகையில், ‘சிம்பிள் இங்கிலீஷ், ஏ.பி.எல்., இங்கிலீஷ் வேர்ட்ஸ்’ ஆகிய சிறப்பு ‘சிடி’க்கள் மூலம், மாணவர்களுக்கு ஆங்கிலப்புலமையை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக, தமிழகத்தில் உள்ள அனைத்து துவக்கப் பள்ளிகளுக்கும் ‘டிவி,’ ‘சிடி’ ப்ளேயர் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தலைமைப் பண்பு, ஒழுக்க பண்புகள் ஆகியவற்றை வளர்க்க பல்வேறு பயிற்சி வகுப்புகள் கல்வித் துறையால் நடத்தப்பட்டு வருகிறது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பயிலும் மாணவர்களின், கம்ப்யூட்டர் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக, கடந்த கல்வியாண்டில் ஒன்பது கம்ப்யூட்டர், ஒரு லேப்-டாப், ஒரு பிரிண்டர் வழங்கப்பட்டன. தற்போது, அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் கம்ப்யூட்டர் கல்வியை புகுத்த வேண்டும் என்ற நோக்கில், நடப்பு கல்வியாண்டு முதல் ஒவ்வொரு அரசு நடுநிலைப் பள்ளிக்கும் தலா ஐந்து ‘லேப்-டாப்’ வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, நடப்பு கல்வியாண்டில், 2,200 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு 50 கோடி ரூபாயில் ‘லேப்-டாப்’ வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 4,400 நடுநிலைப் பள்ளிகளுக்கு அடுத்த கட்டமாக ‘லேப்-டாப்’ வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us