தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்ட கல்லூரியில் தேர்வு: போலீஸ் அதிரடி உத்தரவு

சட்ட கல்லூரியில் தேர்வு: போலீஸ் அதிரடி உத்தரவு

சட்ட கல்லூரியில் தேர்வு: போலீஸ் அதிரடி உத்தரவு


UPDATED : டிச 09, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 09, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனைச் சந்தித்த சட்டக் கல்லூரி முதல்வர், ‘சட்டக் கல்லூரியில் நடைபெறும் தேர்வுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை சட்டக் கல்லூரியில், டிச. 10ம் தேதி முதல் தேர்வுகள் துவங்குகின்றன. கல்லூரியில் ஏற்பட்ட மோதல் சம்பவத்திற்குப் பின், தாக்குதலில் ஈடுபட்ட இரு தரப்பு மாணவர்களும் தேர்வில் சந்தித்துக் கொள்கின்றனர்.
மாணவர்களிடையே மோதலைத் தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகளை, சட்டக் கல்லூரி நிர்வாகம் செய்துள்ளது. கமிஷனர் ராதாகிருஷ்ணனைச் சந்தித்த சட்டக் கல்லூரி முதல்வர் முகமது இக்பால், ‘சட்டக் கல்லூரியில் நடைபெறும் தேர்வுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.
சட்டக் கல்லூரி முதல்வரிடம் கமிஷனர் கூறியதாவது:
10ம் தேதி சட்டக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். காலை மற்றும் பிற்பகல் நடைபெறும் தேர்வில் பங்கேற்க வரும் மாணவர்கள், தேர்வு நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன் வர வேண்டும்.
தேர்விற்கான ஹால்டிக்கெட் வைத்திருக்க வேண்டும். பிற்பகல் நடைபெறும் தேர்வுக்கு, காலையில் வரக் கூடாது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் (தொலைநிலைக் கல்வி) மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அவர்களுக்கும் இதே நடைமுறை பொருந்தும்.
கல்லூரிக்குள் சட்டக் கல்லூரி மாணவர்கள் தான் வருகின்றனரா? என்பதை உறுதிப்படுத்த பேராசிரியர்கள், நுழைவாயில் அருகே இருக்க வேண்டும். மாணவர்கள் அல்லாத யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம். இந்த உத்தரவுகளை மீறி நடக்கும் மாணவர்கள், மாணவர்கள் அல்லாதவர்கள் மீது சம்பவ இடத்திலேயே நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கமிஷனர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us