தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ கல்லூரி டாக்டர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

மருத்துவ கல்லூரி டாக்டர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

மருத்துவ கல்லூரி டாக்டர்களின் போராட்டம் ஒத்திவைப்பு


UPDATED : டிச 09, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 09, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


மதுரை:
அரசு மருத்துவ கல்லூரி டாக்டர்களின் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சங்க மாநில செயலர் செந்தில் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவ கல்லூரியில் மைக்ரோ பயாலஜி உள்ளிட்ட பல துறைகளில், பட்டமேற்படிப்பு சீட்களின் எண்ணிக்கை 25 ஆண்டுகளாக அதிகரிக்கவில்லை. வரும் ஆண்டில் இதை அதிகரிக்க கோரினோம். ஒரு சிறப்பு குழுவை அமைத்து, ஆய்வு செய்து சீட்கள் அதிகரிக்கப்படும் என அரசு உத்தரவாதம் வழங்கியுள்ளது.
மருத்துவ கல்லூரியில் சில துறைகளில் டாக்டர் பணியிடங்களில் எம்.எஸ்சி., படித்தவர்களை நியமித்துள்ளனர். அவர்களை தனி பணியிடத்தில் நியமிக்க வேண்டுமே தவிர, டாக்டர்களின் இடங்களில் நியமிக்க கூடாது என்ற கோரிக்கையையும் பரிசீலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை.,யில், எம்.எஸ்., படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையிலும், மத்திய அரசு டாக்டர்களைப் போல, மாநில அரசு டாக்டர்களுக்கும் சம்பளம் வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளதற்காக தமிழக முதல்வர், சுகாதார அமைச்சர், செயலாளருக்கு நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us