தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.டி., நிறுவனங்களில் கான்ட்ராக்ட் ஊழியர்களுக்கு பறிபோகிறது வேலை!

ஐ.டி., நிறுவனங்களில் கான்ட்ராக்ட் ஊழியர்களுக்கு பறிபோகிறது வேலை!

ஐ.டி., நிறுவனங்களில் கான்ட்ராக்ட் ஊழியர்களுக்கு பறிபோகிறது வேலை!


UPDATED : டிச 10, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 10, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


பெங்களூரு:
தகவல் தொழில்நுட்ப  நிறுவனங்களில், கான்ட்ராக்ட் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்வது அதிகரித்து வருகிறது.
முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களை தவிர, நடுத்தர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நிதி நெருக்கடியில் தள்ளாடுகின்றன; சாதாரண அளவில் இயங்கி வந்த சாப்ட்வேர் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கானவை மூடப்பட்டு விட்டன. நடுத்தர நிறுவனங்கள், வருமானம் குறைந்ததால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து தொடர்ந்து ஆர்டர்கள் வருவது நின்று விட்டதால், ஊழியர்களை குறைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. பி.பி.ஓ., அலுவலகங்களில் பணியாற்ற சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு அதிக ஆட்கள் தேவைப்பட்டனர்.
கல்லூரிகளில் நேரில் சென்று மாணவர்களை தேர்வு செய்து, வேலை வாய்ப்பு தருவதுடன், வெளியில் இருந்தும் ஊழியர்களை இந்த நிறுவனங்கள் அமர்த்தி வந்தன. இதற்காகவே, மனிதவள மேம்பாட்டு கன்சல்டன்சிகள் , பெங்களூரு, மும்பை, சென்னை உட்பட பல நகரங்களில் இயங்கி வந்தன.  வெப்சைட்கள் மூலம், தகுதியானவர்களை தேர்வு  செய்து, சாப்ட்வேர் நிறுவனங்களில்  பணியாற்ற கான்ட் ராக்ட் அடிப்படையில் அனுப்பி வந்தன.
ஆனால், சர்வதேச அளவில் ஏற்பட்ட  நிதி நெருக்கடியில், பெங்களூரு நிறுவனங்கள், கான்ட்ராக்ட் ஊழியர்களை  படிப்படியாக நிறுத்தி விட முடிவு செய்துள்ளன. வேலைக்கு ஆள் எடுத்து அனுப்பும் நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தத்தையும் புதுப்பிக்காமல் விட்டுள்ளன சில நிறுவனங்கள். இதனால், சாப்ட்வேர் பணிகளை செய்யும் தகுதியான ஆட்களை தேர்வு செய்து, சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு அனுப்பும் நிறுவனங்களில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையும் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மொத்தத்தில், 40 சதவீத கான்ட்ராக்ட் ஊழியர்களின் பணி பறிபோகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில், சாப்ட்வேர் பணிக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதை சாப்ட்வேர் நிறுவனங்கள் முழுமையாக நிறுத்தி விட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us