தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பலத்த போலீஸ் பாதுகாப்பில் சட்டக் கல்லூரி தேர்வு

பலத்த போலீஸ் பாதுகாப்பில் சட்டக் கல்லூரி தேர்வு

பலத்த போலீஸ் பாதுகாப்பில் சட்டக் கல்லூரி தேர்வு


UPDATED : டிச 11, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை சட்டக் கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்வுகள் நடந்தன.
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கலவரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சட்டக் கல்லூரி மூடப்பட்டது. இதனிடையே, கல்லூரி தேர்வுகளை போலீஸ் பாதுகாப்புடன் நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து டிச. 10ம் தேதி தேர்வுகள் நடந்தன.
ஐந்தாண்டு சட்டப்படிப்பு, சட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் சட்டக்கல்லூரியில் மாலை நடந்தன. ஐந்தாண்டு மாணவர்கள் 127 பேரில் 90 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 22 சட்ட மேற்படிப்பு மாணவர்களில் 11 பேர் தேர்வெழுதினர்.
மூன்றாமாண்டு சட்டப் படிப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் காலை சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்தது. தேர்வு நடப்பதையொட்டி, சட்டக் கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாணவர்கள் கடுமையான சோதனைக்குப் பிறகே கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரியிலும் போலீஸ் பாதுகாப்புடன் தேர்வுகள் துவங்கின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us