வெள்ளத்தில் மிதக்கும் அரசு பள்ளி: மாணவர்கள் கடும் பாதிப்பு
வெள்ளத்தில் மிதக்கும் அரசு பள்ளி: மாணவர்கள் கடும் பாதிப்பு
UPDATED : டிச 11, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
பூந்தமல்லி: மழை ஓய்ந்து இரண்டு வாரங்களாகியும் பூந்தமல்லியில் உள்ள அரசு பள்ளிகளில் வெள்ளம் வடியாததால் மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெரிய அரசு பள்ளியாக விளங்குவது பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப் பள்ளி. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி நுழைவாயிலை ஒட்டி பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது.
இந்த மைதானத்தை கடந்து தான் மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்ல வேண்டும். நவ. 27ம் தேதி பெய்த கனமழையில் அரசு பள்ளிக்கு அருகே உள்ள சில குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அங்கிருந்த சிலர், அந்த மழை நீரை மோட்டார் வைத்து இறைத்து பள்ளிக்குள் விட்டனர். இதனால், பள்ளியின் விளையாட்டு மைதானத்தை வெள்ளம் சூழ்ந்து, ஒரு ‘மினி’ ஏரி போல மாறிவிட்டது.
நீர் வெளியேற வழியில்லாததால் பள்ளிக்குள் வரும் மாணவர்கள் நீண்ட தூரம் தேங்கி நிற்கும் மழை நீரில் நடந்து வகுப்பறைக்கு செல்லும் அவலம் நீடிக்கிறது. பூந்தமல்லி மேல்மா நகரில் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 350 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பெய்த கனமழையில் மேல்மாநகர் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் பாதிக்கப்பட்ட சிலர், மோட்டார் வைத்து குடியிருப்பு பகுதிகளில் இருந்த மழைநீரை ஆதி திராவிடர் நல பள்ளிக்கு திருப்பிவிட்டனர். இதனால் பள்ளியில் வெள்ளம் குட்டைபோல் தேங் கியது. செந்நீர்குப்பத்தில் உள்ள அரசு பள்ளிக்கும் இதே நிலைதான்.
கடந்த இரண்டு வாரமாக இந்த பள்ளிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர்.
